3 BHK படத்துல ஒட்டாத விஷயம் இதுதான்... இதை எப்படி டைரக்டர் மிஸ் பண்ணினாரு?
இன்று சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீத்தா ரகுநாத் நடிப்பில் வெளியான படம் 3 BHK. படத்தின் ப்ளஸ் மற்றும் நெகடிவ் என்னன்னு பார்க்கலாம்.
படத்தின் கதைகளம் 2006ல் ஆரம்பித்து 2027வரை போகுது. சரத்குமார், தேவயானி தம்பதியினரின் மூத்த மகன் சித்தார்த். 2வது பொண்ணு மீத்தா ரகுநாத். ஆரம்பத்தில் இருந்தே பல வாடகை வீடுகளுக்கு மாறி மாறி ஓனர்ஸ்சோட டார்ச்சர் தாங்க முடியாம எப்படியாவது சொந்த வீடை வாங்கணும்னு நினைக்கிறாங்க. அப்படி வாங்கினாங்களா இல்லையாங்கறதுதான் கதை.
இது எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு தடவை சந்தித்த கதைதான். மிடில் கிளாஸ் தம்பதியினரின் வீடு வாங்கும் கனவு எத்தகைய வலி நிறைந்தது என்பதை மிகைப்படுத்தாம எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.
ஆறிலிருந்து 60 வரை ஃபீலிங் தான் நமக்கு வருது. அனைத்து குடும்பங்களுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம் என டைட்டில்லயே போட்டு விட்டார்கள். கதாபாத்திரத்துக்கு தேவையானவற்றை சித்தார்த் சிறப்பாக நடித்துள்ளார்.
'அப்பா மாதிரி நீ ஆகிடாதப்பா... அடிச்சா தான் வலியா'ன்னு மிடில் கிளாஸ் ஃபேமிலியோட தலைவராக சரத்குமார் அட்டகாசமாக நடித்துள்ளார். மீத்தா ரகுநாத் தமிழ் சினிமா உலகிற்கு நிச்சயமாக இவர் நல்ல நடிகை. அவ்ளோ சிறப்பாக நடித்துள்ளார். டேபிளைத் தட்டிப் பேசும் அந்த ஒரு சீன் போதும்.
இன்னைக்கும் பல இடங்களில் நடக்கும் கொடுமையை அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். யோகிபாபுவும் சூப்பராக நடித்துள்ளார். 'நம்ம மாதிரி மிடில் கிளாஸ்லாம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கப்பா ஃபியூச்சர் நல்லாருக்கும்னு சொல்லி சொல்லியே வாழாம விட்டுடுறோம்'னு சரத்குமார்கிட்ட சித்தார்த் சொல்றாரு. அந்த வகையில் படத்துல எல்லா வசனங்களும் சிறப்பாக இருக்கு. பர்ஸ்ட் ஆஃப் சூப்பர். மொத்தத்துல இது ஃபேம்லியோட பார்க்குற படம்.
படம் முழுக்க எமோஷனல கிரியேட் பண்ண பயங்கர ராவா எடுத்துட்டு ஒரே ஒரு சீன்ல இயக்குனர் கோட்டை விட்டுட்டாரு. படத்துல காமெடி, பாட்டுன்னு எதுவுமே இல்லை. இதனால சில இடங்களில் சீரியல் டிராமா பார்த்த ஃபீல் வருது. மீத்தா ரகுநாத் வரும் சில காட்சிகள் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் வருது.
சீனியர் புரொகிராமராக சாப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்த ஒருநபர் நான் மெக்கானிக்கா லேத்ல வேலை பார்க்குறேன்னு சொல்றது மிகைப்படுத்தப்பட்டது. அது ரியல் லைஃப்ல அவ்வளவு எளிதில் நடக்காது. எந்தக் கம்பெனிலயும் எவனும் மரியாதை கொடுக்க மாட்டான். நமக்கு லோன் இருக்கு.
வீடு இருக்கு. கார் இருக்கு. dew கட்டணுமே. அப்புறம் மானம் மரியாதையை வச்சி என்ன பண்றதுன்னுதான் பல்லைக் கடிச்சிட்டு வேலை பார்க்குறோம் என்பதுதான் உண்மை. பர்ஸ்ட் ஆஃப்ல இருந்த சுவாரசியம் செகண்ட் ஆஃப்ல கொஞ்சம் மிஸ்ஸிங். இன்னும் கொஞ்சம் சுவாரசியத்துக்காக ஒரு சில விஷயங்களைச் சேர்த்துருக்கலாம்.