நந்தாவையும் பிதாமகனையும் மிக்ஸ் பண்ணா வணங்கான்!.. அருண்விஜயை முடிச்சிவிட்ட பாலா!

By :  Murugan
Update: 2025-01-10 09:27 GMT

Vanangaan Review: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இவரின் படம் என்றாலே டிராஜடி, போதை, அம்மா பாசத்துக்கு ஏங்கும் மகன், அதிரடி சண்டை காட்சிகள் என வேறு மாதிரி யோசிப்பார். அதேபோல், காவல் துறை மற்றும் நீதிபதிகளை நக்கலடித்து காட்சிகளை வைப்பார்.

நந்தா படத்தில் சூர்யா, பிதாமகன் படத்தில் விக்ரம், நான் கடவுள் ஆர்யா என இவரின் படங்களின் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் நிஜத்தில் எங்கும் இருக்கமாட்டார்கள். எனவே, ஜாலியான பொழுதுபோக்கு படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு பாலாவை பிடிக்காது. ஆனால், நல்ல சினிமாவை விரும்பும் சிலருக்கு அவர் ஒரு சிறந்த இயக்குனராகவே பார்க்கப்படுகிறது.


தேசிய விருது: நான் கடவுள் படத்தை அவரை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. அந்த படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றார். அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை இயக்கி அந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது.

அதில், இதற்கு முன் பாலா படங்களில் பார்த்த போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் நினைவுக்கு வந்தது. பிதாமகன் படத்தில் விக்ரமை இன்ஸ்பெக்டர் பார்க்கும் அதே காட்சி நினைவுக்கு வந்தது. முன்பு போல இப்போது பாலா படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றே சொல்லவேண்டும்.


வணங்கான்: இந்நிலையில், படத்தை பார்த்த சிலர் டிவிட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். நந்தா படத்தில் வரும் ஒரு காட்சியை முழுப்படமாக எடுத்து வைத்திருக்கிறார். அருண்விஜயின் கதாபாத்திரம் பிதாமகன் படம் விக்ரம் போலவே இருக்கிறது. கதாநாயகி ரோஸ்ணியை சரியாக பயன்படுத்தவில்லை. முதல் பாதியில் கதையே இல்லை. இரண்டாம் பாதி ஆவரேஜாக இருக்கிறது. மிஷ்கின் வேடம் நன்றாக இருக்கிறது. படத்தில் அதிக வன்முறை காட்சிகள். திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. பிலோ ஆவரேஜ்’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

வருகிற விமர்சனங்களை பார்க்கும்போது இதற்கு முன் தான் இயக்கிய படங்களை போலவே பாலா வணங்கான் படத்தையும் இயக்கியுள்ளார் என்றே தெரிகிறது. ஆனாலும், இன்றுதான் படம் ரிலீஸ் என்பதால் இன்னும் முழுமையான விமர்சனங்கள் எப்படி இருக்கிறது என்பது போகபோகவே தெரியும்.

Tags:    

Similar News