படம் கேம் சேஞ்சர் இல்ல.. மொத்தமா கேம் ஓவர்.. ஷங்கரை இப்படி கிழித்து தொங்க விடுறாங்களே!..

By :  Ramya
Update: 2025-01-10 05:25 GMT

Game Changer: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தை நேரடி தெலுங்கு திரைப்படமாக இயக்கியிருக்கின்றார் இயக்குனர் ஷங்கர். இருப்பினும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கின்றது.

இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கிறார். 500 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

ஆந்திராவில் இந்த திரைப்படத்திற்கு ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதிகாலை 4 மணி காட்சியுடன் சேர்த்து நள்ளிரவு 1 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் ராம்சரண் நடித்திருந்த திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படத்தின் மீது அவரின் ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.



 


நடிகர் ராம் சரணின் நடிப்பு இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் தமன் இசை மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. இருப்பினும் இயக்குனர் சங்கரை தான் தொடர்ந்து விமர்சனம் செய்து பதிவிட்டு வருகிறார்கள். படத்தில் பல லாஜிக் மிஸ்டேக்குகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

அதிலும் ஹெலிகாப்டர் காட்சி சுத்தமாக லாஜிக்கே இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனை பதிவிட்டு இதற்கு இந்தியன் 2 படமே எவ்வளவோ பரவாயில்லை. ஆரம்ப காட்சியிலேயே லாஜிக்கே இல்லாமல் ஒரு சீனை எடுத்து வைத்திருக்கின்றார் ஷங்கர் என்று திட்டி தீர்த்து வருகிறார்கள்.


மேலும் இந்த திரைப்படம் ஷங்கர் உடைய ஸ்டைலில் இல்லை. ஏதோ பழைய படத்தைப் பார்த்த ஃபீலிங் இருக்கின்றது. இந்த திரைப்படத்தை பார்க்கும் போது இந்தியன் 2 திரைப்படம் எவ்வளவோ பரவாயில்லை என்கின்ற எண்ணம் வருகின்றது என்றெல்லாம் தொடர்ந்து தங்களது விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வருகிறார்கள்.



இதற்கு முன் வந்த அரசியல் படங்கள் எப்படி இருக்குமோ அதே போன்றுதான் இந்த திரைப்படமும் இருக்கின்றது. பெரிய அளவு வித்தியாசம் காட்டப்படவில்லை என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆந்திரா ரசிகர்கள் தொடர்ந்து ஷங்கரை கிழித்து வரும் நிலையில் தமிழகத்தில் எப்படிப்பட்ட விமர்சனம் வரப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Tags:    

Similar News