Gossip: இனிமே இரண்டாம் பாகமே இல்ல… ’ஹெட்’டை லாக் செய்த வைரல் இயக்குனர்… போச்சுப்பா!
Gossip: தமிழில் அந்த ஆக்ஷன் இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்தில் மிஸ் பண்ண அந்த ஹீரோவை லாக் செய்து இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே முதல் சில படங்களிலேயே வெற்றி கோட்டை தொட்டு விடுவார்கள். ஆனால் சிலருக்கு எடுக்கும் எல்லா படங்களுமே சூப்பர் வெற்றியை பெற்று அவருக்கான ஆதிக்கத்தினை பெற்று கொடுத்து விடும்.
அந்த வகையில் தமிழில் இப்போது வைரலில் இருக்கும் அந்த டைரக்டர் ஆரம்பத்தில் இருந்தே டாப் நடிகர்களை தன்னுடைய படங்களில் இயக்கி வந்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிற்கு ஒரு படத்தினை இன்னொரு படத்துடன் இணைத்து புது ஹாலிவுட் கான்செப்ட்டை உருவாக்கினார்.
இது இங்கு புதுசு என்பதால் பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். அந்த ரூட்டை பிடித்தவர் தொடர்ந்து அது போலவே படம் எடுத்து வைரலிலே இருந்தார். ஆரம்பத்தில் விருது நடிகர் தொடர்ந்து அரசியல் சென்ற நடிகருக்கு இரண்டு படம் என டாப் லிஸ்ட்டில் இருந்தார்.
தொடர்ந்து தன்னுடைய நீண்டநாள் கனவு அயர்ன் கை படமும், பிரசனர் 2 பாகமும் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, டாப் நடிகர் படத்தினை இயக்கி வருகிறார். ஆனால் இவருடைய வைரல் கான்செப்ட் இந்த படத்தில் இருக்கக் கூடாது என நடிகரின் உத்தரவு எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் எல்லோருடன் இந்த இயக்குனர் கைகோர்த்து விட்ட நிலையில் அந்த ஹெட் நடிகருடன் இன்னுமும் இணையாமல் இருந்து வந்தார். அந்த நடிகர் தன்னுடைய அடுத்த இயக்குனரை இதுவரை முடிவு செய்யாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இருவரும் சமீபத்தில் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படி முடிவு செய்யும் பட்சத்தில் விரைவில் அந்த நடிகரின் அடுத்த படத்தினை வைரல் இயக்குனராக இவர் இயக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.