Gossip: கோலிவுட் கழட்டிவிட்டுச்சு… நம்பர் நடிகையின் திடீர் முடிவு… மொக்க பிளானா இருக்கே?
Gossip: ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் நாயகியாக இருந்த நம்பர் நடிகை எடுத்திருக்கும் திடீர் முடிவால் கோலிவுட் ரசிகர்கள் அப்பாடா என்ற நிலைமைக்கு வந்துள்ளனராம்.
தனி நாயகி படங்கள் என்றாலே கோலிவுட்டில் பெரிய அளவில் ஆதரவு இல்லாமல் இருந்தது. அதை தகர்க்கும் விதமாக நம்பர் நடிகையின் தனி நாயகி படங்கள் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது. இதுவே நடிகைக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தினை பெற்று தந்தது.
கெத்தாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் அவரை நம்பர் ஒன் லெவலில் வைத்திருந்தனர். திடீரென அந்த இயக்குனரை கரம் பிடித்தார். அங்கு தொடங்கியது தான் பிரச்னையே. இருவருக்குமான காதல் சமயத்தில் இருந்த வரவேற்பு திருமணத்துக்கு பின்னர் முடிந்தது.
எல்லாமே பிரச்னையாக முடிந்தது. அதிலும் ஆறே மாதத்தில் இவர் கொடுத்த குழந்தை அறிவிப்பு வேறு வெளியாக தமிழ் சினிமாவில் இவரை ஒப்பந்தம் செய்யவே தயாரிப்பாளர்கள் தயங்கினர். அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்கள் கூட இவரை ஓகே செய்தால் கூட வேண்டாம் எனச் சொல்லி வந்தனர்.
அது மட்டுமல்லாமல் இவருடைய தனி நாயகி படங்கள் கூட தொடர் தோல்வியை தழுவியது. அந்த சாப்பாட்டு ராணி படம் கூட பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் எந்த படமும் இதுவரை வெளிவராமல் முடங்கிவிட்டது.
படத்தின் அறிவிப்புடன் படங்கள் நகராமல் நிற்கிறது. தற்போது தமிழில் அந்த பேய் இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் அம்மன் படத்தின் மீது மட்டுமே அம்மணிக்கு ஒரு நம்பிக்கை வைத்துள்ளாராம். அதை தாண்டி இனி தமிழை நம்பினால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்துள்ளராம்.
அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் தன்னுடைய நட்பு வட்டாரத்தின் மூலம் வாய்ப்பு தேட துவங்கி இருக்கிறாராம். தற்போது அக்கட தேச டாப் நடிகரின் படத்தில் அம்மணி இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.