Gossip: நம்பர் நடிகையை காலி செய்ய ஸ்கெட்ச் போட்ட பழைய நம்பர் நடிகை… புது பிரச்னையா இருக்கே?

By :  Akhilan
Published On 2025-06-08 14:26 IST   |   Updated On 2025-06-08 14:26:00 IST

Gossip: நம்பர் நடிகைகள் தான் கோலிவுட்டின் டாப் ஹிட்டில் இருந்து வருகின்றனர். இதில் டாப் லெவலில் இருந்த நம்பர் நடிகை தற்போது இன்னொரு நம்பர் நடிகையை காலி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது.

கோலிவுட்டில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்தவர் நம்பர் நடிகை. கிட்டத்தட்ட டாப் ஹீரோயினாக இருந்தவர் தன்னுடைய டைரக்டர் காதலரை கட்டிக்கிட்டவர் சினிமா கேரியரை தொலைத்து விட்டார்.

ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தொடர்ச்சியாக தோல்வி படங்களாக நடித்தார். மேலும் முன்னணி ஹீரோக்கள் கூட தன்னுடைய படங்களில் ஹீரோயினாக அவரை ஒப்பந்தம் செய்யாமல் ரிஜெக்ட் செய்தனர்.

இந்த கேப்பில் கேரியரில் தள்ளாடிக்கொண்டு இருந்த பழைய நம்பர் நடிகைக்கு வெற்றி பக்கம் வந்தது. நாவல் படம் கொடுத்த வெற்றி ரூட்டை சரியாக பிடித்தவர். கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

இந்நிலையில் அம்மணியின் இரட்டை எழுத்து இங்கிலீஷ் திரைப்படம் வெளியாக மற்றவர்களை விட இவரை தான் ஓவராக கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர். அதிலும் இவரெல்லாம் என்ன இப்படியே நடிக்க தொடங்கிட்டாரு என்ற லெவலுக்கு மோசமான விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

அதிலும் இந்த கதாபாத்திரம் தமிழ் சினிமாவுக்கு பழைய விஷயம் ஒன்னும் இல்லை. நிறைய நடிகைகள் நைட்த்த கதாபாத்திரம் தான். அப்போ இவருக்கு மட்டும் ஏன் இந்த பிரச்னை என விசாரித்தால், மார்க்கெட் இழந்த நம்பர் நடிகை பார்த்த வேலைதானாம் இது.

இப்படியே போனால் இனிமேல் தன்னால் மார்க்கெட்டை பிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் ஒரு டீமை உருவாக்கி தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்களை குவிக்க சொல்லி ஏற்பாடு செய்திருக்கிறாராம். அப்போ தான் இவரின் மார்க்கெட்டும் ஆட்டம் காணும் என்பது இவரின் ஐடியாவாம்.

Tags:    

Similar News