Gossip: 12 வருடம் கழித்து வரும் கிங் ரிலீஸில் தில்லாலங்கடி… இதை செய்தது புரோமோஷனுக்கா?
Gossip: 12 வருடத்திற்கு பின்னர் ரிலீஸ் செய்யப்பட இருக்கும் கிங் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னரே அப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கு காரணம் அதிரடி ஆக்சன் ஹீரோவின் தற்போதைய பரிதாபமான நிலை தான் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் உயரமான ஆக்சன் ஹீரோக்களில் முக்கிய இடம் இந்த மில்கி நடிகருக்கு தான் உண்டு. படங்களில் ஆர்வம் காட்டி வந்த ஒருவரை அவருக்கு இருந்த கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அவர் எப்பொழுது வேறு பொறுப்பை எதிர்பார்த்தாரோ அப்போதிலிருந்தே அவர் விமர்சிக்கும் பொருளாக மாறிவிட்டார்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களும் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு தான் பெறும். அப்படி ஒரு கதையை தேடி நடித்து வந்த மில்கி நடிகருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரான கிங் திரைப்படம் பல வருடமாக பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருந்தது.
திடீரென இந்த பொங்கல் ரிலீசில் இப்படத்தை வெளியிடப்பட இப்படக்குழு முடிவெடுத்தது. அவர்கள் எதிர்பார்த்த அளவு படத்திற்கு முதலில் சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் கம்பீரமாக இருந்த மில்கி நடிகர் தளர்ந்து போய் வந்ததுதான் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் பேசும்போது கூட கை நடுக்கமும், ரசிகர்களுக்கு அவரை பரிதாபமாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு பின்னால் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதுவும் படத்தின் ரிலீஸ் இருக்கு ஒரு ப்ரோமோஷன் ஆக தான் இருக்கும் என சில சந்தேகங்களும் கிளம்பி இருக்கிறது.
ஏனெனில் மில்கி நடிகர் இதுவரை பல நிகழ்ச்சிக்கு வந்த போது கம்பீரமாக தான் வந்திருக்கிறார். அவருக்கு இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக இருந்தால் இதற்கு முன்னர் வந்த எந்த நிகழ்ச்சியிலும் அவர் இப்படி ஒரு நிலையில் வந்ததே இல்லை. இதற்கு முன்னர் கூட மூன்று மதங்களை வேண்டி வித்தியாசமாக ரசிகர்களிடம் வைரலானார்.
இது மட்டுமல்லாமல் படத்தின் பூ நடிகரின் கணவர் உண்மையிலேயே ஹீரோவிற்கு அப்படி ஒரு பிரச்சினை இருந்திருந்தால் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து கஷ்டப்படுத்தி இருக்கக் கூடாது. அவருக்கு காய்ச்சலாகவே இருந்திருந்தால் அவரை உடனே அனுப்பி தானே வைத்திருப்பார்கள்.
12 வருட படத்தின் ப்ரோமோஷன் இருக்காகவே தற்போது இதை செய்ததாக தான் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. தற்போது மற்ற படங்களை விட இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.