இவ்ளோ சீக்கிரம் விருது அறிவிச்சிட்டீங்களே!.. முதல் பரிசு வென்ற தனி ஒருவன்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக விருதுகள் வழங்கப்படவில்லை. திடீரென கடந்த ஆண்டு 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 2015ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான விருது அறிவிப்பை தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது வெளியிட்டுள்ளனர். இதையும் படிங்க: ஹேண்ட் பேக்கில் இவ்ளோ ஐட்டமா? கிரண் காட்டியதும் ஷாக்கான நிருபர்.. இதெல்லாமா காட்டுவீங்க? […]

By :  Saranya M
Update: 2024-03-04 21:00 GMT

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக விருதுகள் வழங்கப்படவில்லை. திடீரென கடந்த ஆண்டு 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது 2015ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான விருது அறிவிப்பை தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஹேண்ட் பேக்கில் இவ்ளோ ஐட்டமா? கிரண் காட்டியதும் ஷாக்கான நிருபர்.. இதெல்லாமா காட்டுவீங்க?

2015ம் ஆண்டு வெளியான படங்களில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனி ஒருவன் படத்துக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜன் இயக்கத்தில் வெளியான பசங்க படத்துக்கு 2வது பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபா எனும் படம் 3வது பரிசு பெறத் தேர்வாகி உள்ளது. மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் சிறப்பு பரிசுக்கு தேர்வாகி இருக்கிறது.

இதையும் படிங்க: கலியுகத்தில் ஒரு ராமராம்!.. விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி டீசர் ஒருவழியா ரிலீஸ்!.. படம் ஓடுமா?..

ஜோதிகா திருமணத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய 36 வயதினிலே படம் பெண்களை சிறப்பாக சித்தரித்த படம் என்கிற பரிசை வெல்லப் போகிறது.

கூடிய விரைவில் அரசு விழாவில் இந்த படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், 2016 முதல் 2023ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு எப்போது விருது கொடுப்பீங்க என்றும் தேசிய விருதுகளே ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து விடுகின்றனர். மாநில அரசு விருதுகள் இவ்வளவு தாமதம் செய்வதால் அந்த விருதையே பலரும் மறந்து விட்டார்கள் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News