கோலிவுட் நாயகி ஆன விஜய் டிவி கனா காணும் காலங்கள் புகழ் சங்கவி… இப்போ ஆளே மாறிட்டாங்க பாருங்க..

By :  AKHILAN
Update: 2025-05-18 09:15 GMT

Kana Kanum Kalangal: பள்ளிக்கால நட்பை பேசும் கனா காணும் காலங்கள் சீரியல் 90ஸ் மக்களுக்கு ரொம்பவே பிரபலம். அதிலும் அதில் முக்கிய கேரக்டரில் நடித்த பலருக்கு இன்னமும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் ஹீரோயின் சங்கவியை யாரும் மறந்து இருக்க முடியாது.

சின்னத்திரை வரலாற்றில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாக பார்த்து வந்த சீரியல் கனா காணும் காலங்கள். தற்போது பல சீசன்கள் கடந்தாலும் பள்ளிக்காலத்தை தாண்டி கல்லூரி கதையை சொன்னாலும் அந்த முதல் சீசன் மட்டுமே இன்றளவும் பலரிடம் பெரிய அளவில் புகழ்பெற்றிருக்கிறது. 

 

இதில் நடித்த எல்லா பிரபலங்களும் ரசிகர்களிடம் இன்னமும் வரவேற்பை பெற்று வருகின்றனர். பாலா, பச்சை, பாண்டி, ஜோ, ராகவி, சங்கவி, வினித் உள்ளிட்ட இந்த கேரக்டர்களின் பெயர்கள் இன்றளவும் பலரிடமும் பரீட்சயமாக தான் இருக்கிறது.

அந்த வகையில் இதில் முக்கிய பிரபலமாக இருந்தவர் சங்கவி வேடத்தில் நடித்த மோனிஷா. துறுதுறு முகம், அழகான நடிப்பு என அவருக்கு ரசிகர்கள் எக்கசக்கமாக இருந்தனர். இந்த சீரியலில் நடிக்கும் போதே இவரின் ஜோடியான வினீத்துடன் ஜோடி நம்பர்1 ல் களமிறங்கினார். 

 

சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீரென சங்கத்தின் கேரக்டர் இறந்ததாக காட்டப்பட்டது. அதன் பின்னர் அந்த சீரியலின் டிஆர்பியை அவர்களால் மீண்டும் பழைய நிலைக்கு தக்க வைக்க முடியவில்லை.

இதில் மோனிஷா விலக காரணம் அவரின் மேற்படிப்புதான் எனவும் கூறப்பட்டது. வெளிநாடுகளில் படித்து வந்தவர் தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில் தன்னுடைய ஆரம்பம் முதல் தற்போது வரை உள்ள வாழ்க்கையை புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவரின் கனா காணும் காலங்கள் புகைப்படம் அதன் பின்னர் செய்தி வாசிப்பாளாராக அவர் இருந்த புகைப்படத்துடன் வெளிநாட்டில் அவர் மேற்படிப்பை படித்தபோது எடுத்த புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் மோனிஷா தற்போது கோலிவுட் பக்கம் தலை காட்டி இருக்கிறார். அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் இதயம் முரளி திரைப்படத்தில் மோனிஷா முக்கிய இடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 

Tags:    

Similar News