Pandian Stores2: கதிருக்கு தெரியாமல் ராஜி எடுத்த முடிவு… சக்திவேலிடம் வசமாக சிக்கிய சம்பவம்!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ராஜி மற்றும் மீனா இருவரும் நகையை விற்க பைனான்ஸுக்கு வந்திருக்கிறார்கள். மீனாவிற்கு வேலைக்கு தாமதமானதால் அவரை அனுப்பிவிட்டு ராஜி மட்டும் இருக்கிறார். நகையை விற்க வந்திருப்பதாக அதை செக் செய்திருப்பவர்களிடம் கொடுக்கிறார்.
உள்ளே சக்திவேல் மேலதிகாரியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். என்ன லாபமே இல்லை எனக் கேட்க இப்பலாம் மக்கள் உஷாரா மாறிட்டாங்க. பேங்கிற்கு போய்டுறாங்க என்கிறார். சக்திவேல், உன்னை நம்பிதான் பினாமியா போட்டு இந்த பைனான்ஸை தொடங்கியதாக சொல்கிறார்.
அப்போ அவர் ராஜியை பார்த்துவிட இவ எதுக்கு இங்க வந்து இருக்கா என பக்கத்தில் இருந்தவரை அழைத்து கேட்கிறார். அவர் நகையை விற்க வந்து இருப்பதாக சொல்ல நகையை பார்க்கும் சக்திவேல் தன் வீட்டு நகை என கண்டுபிடித்து விடுகிறார்.
உடனே சாயந்திரம் வந்து பணத்தை வாங்கிக்க சொல்ல ராஜியை ஏமாற்றி அனுப்பி விடுகின்றனர். அவரும் நம்பி சென்று விடுகிறார். வீட்டிற்கு வரும் சக்திவேல் வந்து எல்லாரையும் அழைக்க ஒரு சந்தோசமான செய்தி எனக் கூறுகிறார்.
வெற்றிவேல் வர ராஜி கொடுத்த நகையை எடுத்து போடுகிறார். அங்கிருந்த பெண்கள் அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் எனக் கூற அவர்கள் பார்த்து இது ராஜிக்கு போட்ட நகை என்பதை கண்டுபிடித்து விடுகின்றனர். கல்யாணத்துக்கு சேர்த்து வச்ச நகை எனக் கூறிவிடுகின்றனர்.
நகை மொதலில் வித்துவிட்டதாக சொன்னாங்க. அப்புறம் காணாம போச்சுனு சொன்னாங்க. ஆனா எல்லாத்தையும் வீட்டில வச்சி இருந்து இருக்காங்க என்கிறார். என்னடா சொல்ற எனக் கேட்டு சரி அப்படி அந்த நகை உன் கையில் எப்படி வந்துச்சு எனக் கேட்கிறார் அப்பத்தா.
பைனான்ஸ் கடையில் நடந்த விஷயங்களை மொத்தமாக சொல்லி விடுகிறார். பார்த்ததுமே சந்தேகம் வந்து விட்டது. அதான் எடுத்துட்டு வந்தேன் என்கிறார். 60 சவரன் நகையில் 32 தான் இருக்கு. வா மிச்சத்தை போய் கேட்கலாம். என் பையனை கடத்தல்காரனு சொன்ன அந்த குடும்பத்தை திருடனு சொல்லியே ஆகணும் என்கிறார்.
அண்ணன் வாங்க. நான் கேட்கணும் என சக்திவேல் கத்திக்கொண்டு இருக்கிறார். வெற்றிவேல் அமைதியா நிற்கிறார். எல்லாரும் சொல்லியும் கேட்காமல் பாண்டியன் வீட்டிற்கு முன் போய் வம்புக்கு நிற்கிறார் சக்திவேல். பாண்டியனை கேவலமாக திட்ட முதல் ஆளாக ராஜி மற்றும் கதிர் வருகின்றனர்.
கதிர் என்ன பேசிட்டு இருக்கீங்க எனக் கேட்க அந்த நகையை ராஜி விற்க வந்த கதையை சொல்லி விடுகிறார். கோமதி என்ன பழி போடுறீயா எனக் கேட்க உன்கிட்ட பேச்சே இல்ல. அந்த பாண்டியனை வரச்சொல்லு என்கிறார். அவன் வரணும். வந்தே ஆகணும் என்கிறார்.
கோமதி போய் பாண்டியனுக்கு கால் செய்து சக்திவேல் சண்டையை சொல்கிறார். ராஜி தன் ரூமுக்கு சென்று மீனாவுக்கு கால் செய்கிறார். நகை விஷயம் குறித்து அவரிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நீ தைரியமா இரு. நான் உடனே வரேன் என சமாதானம் சொல்லி வைக்கிறார்.