Pandian Stores2: செந்திலுக்கு கிடைச்ச அரசு வேலை… இனி பாண்டியன் என்ன செய்ய போறாரோ?
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
மீனா வீட்டிற்கு செந்தில் மற்றும் மீனா இருவரும் வந்திருக்கின்றனர். பொதுப்பணித்துறையில் மாப்பிள்ளைக்கும் வேலை தயாராகிவிட்டதாகவும் விரைவில் அதற்கான கால் வரப்போவதாகவும் கூறி சந்தோஷப்படுத்துகிறார் மீனாவின் அப்பா.
ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அரசு அலுவலகத்தில் இருந்து ஒரு அதிகாரி கால் செய்து உடனே அலுவலகம் வரக் கூறுகின்றார். விஷயத்தை கூறாமல் சென்றால் மட்டும் மீனாவை அழைத்துக் கொண்டு அவர் அலுவலகத்திற்கு செல்கின்றார்.
அவர்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது மீனா தன்னுடைய உயர் அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். கடையில் பாண்டியன் இன்னும் கொடுக்க வேண்டிய ஆர்டர் நிறைய இருக்கிறது செந்தில் போயி இன்னும் வரவே இல்லை என புலம்பி கொண்டிருக்கிறார்.
உடனே செந்தில் போனுக்கு பாண்டியன் கால் செய்து அவர் அப்பாக்கு குறித்து விசாரிக்கலாம் என கால் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. மீனாவிற்கு கால் செய்யலாம் என அவருக்கு கால் செய்தாலும் பிஸியாக சென்றதால் பாண்டியன் கடுப்பாகி செந்திலைத் திட்டிக் கொண்டிருக்கிறார்.
மீனா ஃபோனை வைத்துவிட்டு சென்ற இடம் மாமா போன் செய்தார் அவரிடம் ஏன் பேசவில்லை என கேட்கிறார். ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருக்கேன். இப்ப அவர்கிட்ட பேசினா இன்னும் என்ன டென்ஷன் ஆகிடுவாரு என செந்தில் கூறி விடுகிறார்.
மூவரும் சரியாக அலுவலகத்திற்கு வருகின்றனர். அவர்களை உள்ளே அழைத்து வர உட்கார வைத்து அரசு அதிகாரி அவர்கள் முன் ஒரு கடிதத்தை கொடுக்கிறார். உங்களுடைய வேலைக்கான நியமன கடிதம் தான் இது எனக் கூற செந்தில் மற்றும் மீனாவிற்கு ஆனந்த அதிர்ச்சியாக இருக்கிறது.
அதை பிடித்து பார்க்க செந்தில் தலை சுத்தி விடுகிறது. என்னாச்சு என மீனா கேட்க என்னுடைய ஆர்டர் எங்க என பதறுகிறார். உங்ககிட்ட தாங்க இருக்கு என மீனா கூறுகிறார். பின்னர் அலுவலகத்திலிருந்து வெளியேற மீனாவின் அப்பாவிடம் இது உண்மைதானா என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மீனா மற்றும் செந்தில் பேசிவிட்டு கதிருக்கு கால் செய்து உடனே வீட்டுக்கு வரவேண்டும் என செந்தில் கூறி போனை வைக்கிறார். இந்த விஷயத்தை தற்போது பாண்டியரிடம் சொல்லும் போது அவருடைய பதில் என்னவாக இருக்கும். 10 லட்சம் விஷயம் வெளியில் வருமா என தற்போது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.