Pandian Stores2: செந்திலுக்கு கிடைத்த அரசு வேலை… பாண்டியனுக்காக சரவணன் எடுத்த திடீர் முடிவு!

By :  AKHILAN
Published On 2025-07-03 11:42 IST   |   Updated On 2025-07-03 11:42:00 IST

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

கதிர், சரவணன், பழனியை வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கிறார். கோமதி எதுக்கு வந்தீங்க எனக் கேட்க செந்தில் தான் போன் செய்து வரச்சொல்லி இருந்தான் எனக் கூற எதுக்கு வரச் சொன்னான். அதெல்லாம் தெரியாது எனக் கூற கோமதி கடுப்பாகி விடுகிறார்.

அதே நேரத்தில் சரியாக பாண்டியனும் வீட்டுக்கு வர ஏங்க நீங்களும் செந்தில் சொல்லி தான் வந்தீங்களா எனக் கேட்கிறார். நான் ஏன் டி அவன் சொல்லி வரணும். அவன் யாரு என்னை வரச்சொல்லுறதுக்கு என்கிறார். அப்போது சரியாக செந்தில் மற்றும் மீனா வீட்டுக்கு வருகின்றனர்.

செந்தில் வர என்னாச்சு எனக் கேட்க ஒரு லெட்டரை படிக்க கொடுக்கிறார். உடனே பாண்டியன் அதை வாங்கி பார்க்க ஆங்கிலத்தில் இருக்க தங்கமயிலிடம் படிக்க கொடுக்கிறார். அவர் முழிக்க பின்னர் கதிர் வாங்கி படித்து ராஜியும் சந்தோஷப்படுகிறார்.

என்னடா நீங்களே சிரிச்சிட்டு இருந்தா எப்படி எனக் கேட்க செந்திலுக்கு அரசு வேலை கிடைச்சி இருப்பதாக சொல்கிறார். பாண்டியனும் சந்தோஷப்பட வேலை கிடைத்த விவரத்தினை சொல்லி விடுகிறார் மீனா. எல்லாரும் செந்திலுக்கு வாழ்த்து சொல்லி சந்தோஷப்படுகிறார். 

 

பாண்டியன் தன் கடையில் வந்து போனவருக்கு எல்லாம் அந்த அப்பாயின்மெண்ட் லெட்டரை காட்டி பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது சரவணன் வர நான் வேணா இனி செந்திலுக்கு பதில் கடைக்கு வரேன் என்கிறார்.

பாண்டியனும் சந்தோசம் தான். நீ உன் முதலாளியிடம் பேசிட்டு வா என்கிறார். வீட்டில் கதிர், செந்தில், ராஜி, மீனா உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். நிலம் வாங்க எவ்வளோ ஆகும் எனக் கேட்க கதிர், மீனா கடுப்பாகின்றனர். இன்னும் வேலைக்கே சேரலை எனக் கலாய்க்கின்றனர்.

பின்னர் கதிர் டிராவல் பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக சொல்கிறார். அதற்கு 15 லட்சம் செலவு ஆகும் எனக் கூற பேங்க் லோன் விசாரித்து கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார். மீனா தனக்கு தெரிந்தவர்களிடம் லோன் விஷயம் பேசுவதாக சொல்கிறார்.

Tags:    

Similar News