Pandian Stores2: கோமதியை லாக் செய்த ராஜி… கண்கலங்கிய மீனா… என்ன செய்ய போகிறார் பாண்டியன்?
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ராஜி அப்போ நேத்து நான் பேசுனத மறந்துட்டீங்களா எனக் கேட்க நான் எங்க அண்ணனுக்கே பயப்பட மாட்டேன். உனக்கு பயப்படுவேனா என்கிறார். அப்படியா அப்போ நேத்து பேசுனத சத்தமா பேசவா என்கிறார் ராஜி.
தங்கமயிலிடம் சென்று பேச போக கோமதி அட சும்மா இருடி எனக் கூற அதெல்லாம் இல்ல பேசுவேன் என்கிறார். சும்மா இரு எனக் கேட்க அப்போ மீனா அக்காவிடம் பேசுங்க எனக் கூற சரி பேசி தொலைறேன் என்கிறார். ராஜி நான் போய் மீனா அக்காவை கூப்பிட்டு வரேன் என்கிறார்.
தங்கமயில் நீங்க எதுக்கு பயந்தீங்க எனக் கேட்க அதெல்லாம் இல்ல என்கிறார். இல்ல நீங்க எதோ பயந்தீஙக் எனக் கேட்க அதெல்லாம் இல்ல. நீ நேத்து வந்தவ. ஆனா ராஜி என் அண்ணன் பொண்ணு ஆயிரம் இருக்கும் எனப் பேச மயில் வாயை மூடிக்கொள்கிறார்.
ராஜி மீனாவை அழைத்து வந்து பேச சொல்ல முதலில் கோமதி பேசாமல் இருக்கிறார். ஆனால் ராஜி திருச்செந்தூர் கதையை ஆரம்பிக்க கோமதி, கேசரி என்ன கலரில பண்ணட்டும் என மீனாவிடம் பேசுகிறார். மீனா நீங்க பேசுறீங்க என கண் கலங்கி அவருடன் சமாதானம் ஆகிவிடுகிறார்.
உங்க பையனிடம் பேசுறீங்களா எனக் கேட்க கோமதி பேசுறேன் என்கிறார். ஆனா என் புருஷன் இல்லாதப்ப வாயவே திறக்க மாட்டேன் என்கிறார். பின்னர் மீனா, ராஜி, கோமதி மூவரிம் சிரித்து பேசிக்கொண்டு இருக்க மயில் என்ன சண்டை போட்டாலும் ஒன்னா ஆகிடுறாங்க என அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.
செந்தில் வேலைக்கு தயாராகி விடுகிறார். எல்லாரிடமும் சொல்லி விட்டு கிளம்ப கோமதி செந்திலை ஆச்சரியமாக பார்க்கிறார். பாண்டியன் வீட்டில் இல்லாத விஷயத்தை சொல்ல செந்தில் கவலையாகிறார். பழனி, சரவணன் வந்து செந்திலை வழி அனுப்புகிறார்கள்.
மீனாவின் அப்பா வந்து செந்திலுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு காரில் மீனாவுடன் கிளம்புகிறார். கதிர் செந்திலை அழைத்து கொண்டு பைக்கில் செல்கிறார். கதிர் மற்றும் செந்தில் பாண்டியன் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். கடையில் சரவணன் மற்றும் பழனிக்கு திட்டு விழுகிறது.
கோமதி கால் செய்து பாண்டியனிடம் வழி அனுப்ப நீங்களும் வந்து இருக்கலாமே என்கிறார். செந்தில் கடைக்கு போகலாம் எனக் கூற கதிர் சொல்லியும் அவர் பிடிவாதம் பிடிப்பதால் கடைக்கு வண்டியை விடுகிறார். பாண்டியன் சரவணன் மற்றும் பழனியை திட்டிவிட்டு வேலை இருப்பதாக வெளியில் கிளம்புகிறார்.