Pandian Stores2: கதிருடன் நடந்த கல்யாண உண்மையை உடைக்க போகும் ராஜி… அதிர்ச்சியில் மீனா மற்றும் கோமதி!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
கதிர் வீட்டினர் கடுப்பாக இருக்க அப்போ சரவணன் மற்றும் பழனி வர இவங்க எதுக்கு வந்து இருக்காங்க என்கிறார் சக்திவேல். கதிர் நீங்க எதுக்கு இங்க வந்தீங்க எனக் கேட்க அம்மாதான் போன் செய்து வரச்சொன்னதாக சொல்கிறார்.
பழனி என்ன அண்ணன் உனக்கு பிரச்னை எனக் கேட்க உங்கள்கிட்ட பதில் சொல்ல முடியாது. மெயின் குற்றவாளி வரட்டும். எல்லாத்தையும் சொல்றேன் எனக் கூறிவிடுகிறார். மீனா வந்து இறங்க சக்திவேல் சைட் குற்றவாளிலாம் வருது. மெயின் குற்றவாளி வரலையே என்கிறார்.
மீனா ராஜியை உள்ளே அழைத்து சென்று கேட்க நகை விஷயமா பேசியதாக கூறுகிறார். அவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சிது எனக் கேட்க சித்தப்பா ஆள் வச்சு ஒரு பைனான்ஸ் கம்பெனி நடத்துகிறார். அதுவா இருக்குமோ என ராஜி சந்தேகப்பட உன்னை தனியா விட்டு வந்ததுதான் என் தப்பு என்கிறார் மீனா.
சரியாக பாண்டியனும் வந்துவிட சக்திவேல், வாங்க அண்ணன். மெயின் குற்றவாளி வந்துட்டான் என்கிறார். பாண்டியனை சரமாரியாக அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறார். முத்துவேல் நேரடியாக விஷயத்துக்கு வந்து ராஜியின் நகை காணாமல் போன விஷயம் குறித்து நீங்க என்ன கதை சொன்னீங்க? திருடிட்டு போன நகையை கண்டுபிடிச்சா தூக்கி மூஞ்சில விசிறி அடிப்பேனு சொன்ன என்கிறார்.
ஆமா கிடைச்சா கொடுக்க தானே போறேன் என பாண்டியன் கூறுகிறார். நீ சொன்னது மொத்தமும் பொய் எனக் கூறி நகையை எடுத்து காட்டி ராஜியின் அம்மாவிடம் இந்த நகை யாரோடது எனக் கேட்க ராஜியின் நகை என்கிறார். ராஜியை தவிர மற்றவர்கள் அதிர்ந்து நிற்கின்றனர்.
ஆட்டைய போட்ட நகையை விக்கிறப்பா யோசிச்சி இருக்கணும். ஆனா எங்க பைனான்ஸில் வந்து விக்க வந்து இருக்காங்க என்கிறார். யாரு என செந்தில் கேட்க என்னமா நடிக்கிறீங்க எனக் கலாய்க்கிறார் சக்திவேல். பாண்டியன் எங்களுக்கு எதுவும் தெரியாது. ராஜியிடம் நீங்க போலீஸில் புகார் கொடுத்தீங்களே எனக் கேட்கிறார்.
முத்துவேல் கடுப்பாக அப்புறம் ஏன் ராஜியை நகையை விக்க அனுப்புன எனக் கேட்க பாண்டியன் அதிருகிறார். சக்திவேல் தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தினை மட்டம் தட்டியே பேசிக்கொண்டு இருக்கிறார். கோமதியை நீ எங்க வீட்டில் இருந்த வரை நல்லாதானே இருந்த. இந்த உதவாக்கரை கூட போனப்பையே நீ கெட்டு போய்ட்ட என்கிறார் சக்திவேல்.
நான் வரப்ப ஒன்னுமே எடுத்துட்டு வரலை. நீ வரப்ப எடுத்துட்டு வானு சொன்னாளா என சக்திவேல் கேட்க பாண்டியன் கோபப்பட்டு கத்துகிறார். இதில் கடுப்பான ராஜி நீங்க ஓவரா பேசுறீங்க என்கிறார். முத்துவேல் அவங்க உன்னை யூஸ் பண்ணிக்கிறாங்க. நீ அவங்களுக்கு சப்போர்ட் செஞ்சிட்டு இருக்க என்கிறார்.
சக்திவேல், நாங்க வேண்டாம்னு தான் போன அப்புறம் நகை மட்டும் எதுக்கு? இவங்க உனக்கு அப்படி என்ன செஞ்சிட்டாங்க என்கிறார். இதில் கடுப்பான ராஜி, இவங்க யாருமே எதுவும் சொல்லலை. நகையை விக்க போனது நானா எடுத்த முடிவு. சுயமா எடுத்த முடிவு. இவங்க யாருக்குமே எதுவுமே தெரியாது என்கிறார் ராஜி.
குமார் அம்மா சரி அதை நாங்க நம்புறோம். திருட்டு போன நகை உன் கைக்கு எப்படி வந்துச்சு எனக் கேட்கிறார். திருட்டு போன நகை கிடைச்ச விஷயத்தை சொல்ல கோமதி என்னிடம் ஏன் சொல்லலை என்கிறார். முத்துவேல் நீங்க நகையை வச்சி இருந்து போலீஸை திசை திருப்பி இருக்கீங்க என்கிறார். பாண்டியன் கதிரிடம் நீதான் நகையை விக்க சொன்னீயா எனக் கேட்க ராஜி அது அவருக்கு தெரியாது. வீட்டில்தான் கொடுக்க சொன்னான் என்கிறார்.
கதிர் பிசினஸுக்கு உதவி செய்றதுக்குதான் அந்த நகையை விக்க போனதாக சொல்கிறார். பாண்டியன் நாங்க என்ன செத்த போய்டோம் என்கிறார். சக்திவேல் மோசமாக பேச ராஜி கடுப்பாகி அவனை பத்தி பேசுனா கோபம் வரும் என்கிறார். அவன் திருட்டு பைய, அயோக்கியன், எங்க வீட்டு பெண்ணை இழுத்துட்டு போனான் எனக் கூற ராஜி கோபத்தில் நிறுத்துங்க.
இன்னைக்கு நீங்களும், அப்பாவும் கெளரவா இருக்கதுக்கு காரணமே கதிர்தான் எனக் கூறுகிறார். முத்துவேல் என்ன செஞ்சான் எனக் கேட்க நிறைய பண்ணிட்டான். நம்ம குடும்பத்துக்கு எக்கசக்கமா பண்ணிட்டான் என்கிறார். இருந்தும் சக்திவேல் மோசமாக பேச ராஜி அம்மாவும் பேசுகிறார்.
எதுக்கு பொய் சொல்லிட்டே இருக்க எனக் கேட்க ராஜி ஏனா நான் பெரிய உண்மையை மறைச்சிட்டு இருக்கேன். அதுக்குதான் மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்கேன் என அழுகிறார். கோமதி மீனாவிடம் என்ன பேசுறா புரியலையே எனக் கேட்க அவ கல்யாண கதையை சொல்ற என அதிர்ந்து கூற கோமதி ஷாக்காகி விடுகிறார்.