Siragadikka Aasai: சீதாவின் காதலை அறிந்த முத்து… இனிமே அருண் நிலைமை சிக்கல்தான் போலயே!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
சீதா நம்மை கோயிலுக்கு வரச்சொல்லி இருப்பதாக முத்துவிடம் சொல்கிறார் மீனா. என்ன விஷயம் எனக் கேட்க சீதா ஒருவரை விரும்புகிறாள் என்கிறார். இதை கேட்டு முத்து அதிர்ச்சியாக அதுக்குள்ள வளர்ந்துட்டா எனக் கூற ஏன் அவளுக்கு வயசு இருக்கே என்கிறார் மீனா.
விஜயா தன்னுடைய நகையை போட்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார். மறுபக்கம் மனோஜுடன் ரோகிணி சண்டை போடுகிறார். உங்க அம்மாக்கு பிடிச்சதை வாங்கி கொடுத்தும் கூட மனசு மாறலை. நீ எனக்கும் சப்போர்ட் செய்ய மாட்டிங்கிற.
அவங்களுக்கு பிடிச்சதை இப்படி வாங்கிக்கொடு என மனோஜ் கூற அவங்களுக்கு இப்படி வாங்கி கொடுக்க நான் கொள்ளை தான் அடிக்கணும். இதுவே நான் கடையில் வாங்கலை. தெரிந்தவர்களிடம் விலைக்கு வந்த நகையை கடன் வாங்கி வந்திருக்கேன் என்கிறார்.
நீ உங்க அம்மாக்கிட்ட பேசு. இல்லனா நம்மளை பிரிச்சிடுவாங்க என்கிறார். அதெல்லாம் நடக்காது. நான் அமைதியா இருக்கப்ப பேசுறேன் என்கிறார். மறுபக்கம் ஸ்ருதி ரவியிடம் வேலையை ரிசைன் செஞ்சிட்டீயா எனக் கேட்கிறார்.
நம்ம வேற ரெஸ்டாரெண்ட் தொடங்கலாம் எனக் கூற ரவி அதுக்கு நிறைய காசு வேண்டும் என்கிறார். நான் அச்சனிடம் வாங்கி தரேன் எனக் கூற அதெல்லாம் வேண்டாம். சொந்த உழைப்பில் தான் முன்னேறுவேன் எனக் கூறி விடுகிறார். உடனே ஸ்ருதி என்னுடைய சேவிங்க்ஸில் கொஞ்சம் அமவுண்ட் இருக்கிறது.
அதை வச்சு நான் ரெஸ்டாரெண்ட் தொடங்க போறேன். நீ அதில் செஃப் ஆக இரு. எப்போ என் மேல உனக்கு நம்பிக்கை வருதோ அப்போ என்னுடைய பார்ட்னர் நீ எனவும் கூறுகிறார். ரவி முதலில் நீ ஆரம்பி பின்னர் பார்க்கலாம் என வைத்து விடுகிறார்.
மறுபக்கம் சீதாவை காண கோயிலுக்கு வருகிறார் அருண். இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மீனா, முத்து மாப்பிள்ளைக்கு பழம் வாங்க இறங்கி அவருக்கு பிடிச்சதை சீதாவிடமே கேட்டு வாங்கிக்கொண்டு கோயிலுக்கு வருகின்றனர்.
அருண் மற்றும் சீதா இருவரும் பேசிக்கொண்டு இருக்க முத்து, மீனா கோயிலுக்குள் வந்து விடுகின்றனர்.