Siragadikka Aasai: மனோஜால் மீண்டும் பிரச்னையில் சிக்கும் விஜயா… இந்த உருட்டு தேவையா?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
வீட்டில் விஜயா கடுப்பாக உட்கார்ந்து இருக்க அண்ணாமலை, கிரிஷ் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ வரும் முத்து, மீனா எல்லா பிரச்னையையும் பேசி சரி செய்துவிட்டதாக சொல்கிறார். மனோஜும் வந்திருந்ததாக சொல்ல உடனே அவன் வந்து இருந்தான். அப்போ அவன் பேசி சரிப்பண்ணி இருப்பான் என்கிறார்.
உடனே, மனோஜை முத்து மார்க்கமாக பார்க்க அவர் நான் எதுவும் பேசவில்லை. சும்மா நின்னேன் எனக் கூறிவிடுகிறார். ஒருவழியா பிரச்னை முடிந்துவிட்டதாக சொல்ல இனிமே இவன் எந்த பிரச்னையையும் இழுத்துட்டு வராம இருந்தா சரி எனக் கூறி செல்கிறார்.
வீட்டில் ரோகிணி பீட்சா வாங்கி வந்து கிரிஷுக்கு கொடுக்கலாம் என எதிர்பார்க்க மனோஜ் உனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்குமா எனக் கேட்கிறார். ரோகிணி தடுமாற அன்னைக்கு இந்த பையனுக்கு ஹெல்ப் பண்ணியே எனக் கேட்க ரோகிணி பேசி சமாளித்து விடுகிறார்.
மனோஜும் சென்று விட கிரிஷை தனியாக அழைத்து பீட்சா வாங்கி கொடுக்கிறார். அவர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது மீனா சாப்பாடு கொடுக்க கிரிஷை தேட அவர் ரோகிணி ரூமில் இருப்பதாக கத்தி சொல்கிறார். அப்போ மீனாவும் அங்கு வந்துவிட ரோகிணி தடுமாற்றத்துடன் பார்க்கிறார்.
மீனாவும் சரியென கதவை சாத்திவிட்டு செல்கிறார். முத்து கிரிஷுக்கு சாப்பாடு கொடுக்கலையா எனக் கேட்க ரோகிணி பீட்சா வாங்கி கொடுத்ததாக சொல்கிறார். முத்து யோசனையாக பார்க்க எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு ரோகிணி எதுக்கு கிரிஷ் மேல இப்படி பாசமா இருக்கணும் என்கிறார்.
உடனே முத்து எனக்கும் சந்தேகமாதான் இருக்கு. அந்த பார்லர் அம்மா நம்மக்கிட்ட என்னமோ பெரிய விஷயமா மறைக்கிற மாதிரி தெரிது எனப் பேசிக்கொண்டு இருக்கிறார். பார்வதி வீட்டுக்கு தீபன் மற்றும் ரதி வீட்டினர் வர பார்வதி இவங்க காதலுக்கு இந்த இடம்தான் காரணம் என பெருமையாக பேசுகிறார்.
அவர்களும் ஆமா அதுக்குதான் இந்த இடத்துக்கு வந்திருக்கோம். இவங்க கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிச்சாலும் எங்களுக்கு மன உளைச்சல்தான் அதிகமா இருக்கு. அதனால் அதுக்கு நீங்க நஷ்ட ஈடு தரணும். இரண்டு குடும்பத்துக்கும் சேர்த்து 10 லட்சம் தந்துடுங்க என அதிர்ச்சி கொடுக்கின்றனர். இவங்க செஞ்சதுக்கு எங்களை பணம் கேட்கிறீங்களே எனக் கேட்கிறார்.
அதெல்லாம் பாதிக்கப்பட்டவங்களுக்கு காசு கொடுத்து சரி பண்றது மாதிரி. எங்க மன உளைச்சலுக்கு இதான் சரி என்கிறார்கள். பார்வதி தீபனை பிடித்து என்னடா இப்படி கேட்கிறாங்க எனக் கேட்க நானும் சொன்னேன் ஆண்ட்டி. அவங்க புரிஞ்சிக்கலை. பேசாம கேட்ட காசை கொடுத்திருங்க எனக் கூறிச் செல்கிறார்.