Siragadikka Aasai: பிரச்னை ரோகிணியை தேடி படை எடுக்குதே… இந்த முறை பெரிய வேட்டைதான்!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
விஜயா அமைதியாக உட்கார்ந்து இருக்க விளையாடி கொண்டு இருந்த கிரிஷ் அவரை பயமுறுத்தும் விதமாக அருகில் வந்து குதிக்கிறார். இதில் கடுப்பான விஜயா கிரிஷை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே வீட்டில் இருந்தவர்களும் ஆள் இருக்கு வந்து என்ன விஷயம் என கேட்க கிரிஷ் குறித்து மோசமாக பேசுகிறார் விஜயா.
ஒரு கட்டத்தில் மனோஜும் கடுப்பாகி கிரிஷை மிரட்டி அடிக்க போக ரோகிணி அவரை தடுத்து விடுகிறார். உடனே முத்து அடிக்க வரியா என்னை மீறி அவன் மேல கைய வச்சு பாரு என அவரிடம் வம்புக்கு செல்கிறார். அந்த நேரத்தில் பார்வதி அலறிக்கொண்டு வீட்டிற்குள் வருகிறார்.
என்ன விஷயம் என எல்லோரும் கேட்க ரதி மற்றும் தீபன் வீட்டிலிருந்து வந்து 10 லட்சம் பணம் கேட்ட விஷயத்தை சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். பார்வதி உனக்கு வீட்டை டான்ஸ் கிளாஸ் தான் நான் கொடுத்தேன். இப்ப என்கிட்ட வந்து காசு கேக்குறாங்க என பேசிக் கொண்டிருக்கிறார்.
உடனே முத்து அவர்களுக்கு இப்படி ஒரு ஐடியா வந்ததுக்கு காரணமே மனோஜ் தான் என்கிறார். விஜயா உடனே இப்ப எதுக்கு நீ அவனை குறை சொல்லிக்கிட்டு இருக்க என கேட்க, ரவி என்னாச்சுடா எனவும் கேட்கிறார். ரவி வீட்டில் மனோஜ் செய்து அடைப்பட்ட விஷயத்தை உடைத்து விடுகிறார்.
விஜயா உடனே மனோஜிடம் இவங்க சொல்றது உண்மைதானா எனக் கேட்க ரோகிணி தான் இதற்கு ஐடியா கொடுத்ததாக அவரையும் போட்டு விடுகிறார். ரோகிணி உடனே என் மேல நீங்க கோபமா இருந்தீங்க ஆண்ட்டி அதற்காக தான் சரி செஞ்சா சமாதானம் ஆகுவீங்க என நினைத்ததாக கூறுகிறார்.
மனோஜ் நம்ம எதுக்கு காசு கொடுக்கணும். பார்வதி ஆண்ட்டிகிட்ட தானே காசு கேட்டாங்க எனக் கூற அவரோ நான் ஒரு நட்பாக தான் வீட்டை வாடகை கூட வாங்காமல் டான்ஸ் கிளாஸிற்கு கொடுத்தேன் அந்த காசுக்கு நான் எங்க போவேன் என கூற விஜயா அவரை தடுத்து விடுகிறார்.
என்னை சமாதானப்படுத்த ரோகிணி தானே இந்த ஐடியாவை கொடுத்தது. அதனால் இந்த பணத்தையும் ரோகிணி தான் கொடுப்பாள் என விஜயா கூறி விட மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை ஆன்ட்டி என்னை ரோகிணி கூறுகிறார்.
என்னை சமாதானம் செய்யணும்னா இந்த பணத்தை நீ தான் கொடுக்கணும் எனக் கூறி விடுகிறார். பார்வதியிடம் அவர்களுக்கு போன் செஞ்சு ரோகிணி கொடுப்பாள் என சொல்லிவிடு எனவும் கூறுகிறார். பின்னர் மாடியில் ரவி மற்றும் மனோஜ் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போ மனோஜ் அழுக அந்த நேரம் பார்த்து வரும் முத்து என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க என கேட்க இவன் அழுகிறான் என ரவிக்கு கூறுகிறார். முத்து விசாரிக்க ரோகிணி எப்படி அவ்வளவு ரூபாய் பணத்தை கொடுக்க முடியும் நீ தான் ஏதாவது செய்யணும் என முத்து விட உதவி கேட்கிறார்.
அப்ப எனக்கு நீ சர்வீஸ் சார்ஜ் கொடுக்கணும் என முத்து கூற நீ எது கேட்டாலும் செய்து விடுகிறேன் என மனோஜ் சொல்கிறார். கிச்சனில் ரோகிணி அழுக அங்கு வரும் மீனா மற்றும் ஸ்ருதி அவரை விசாரிக்கின்றனர். இவ்வளோ காசுக்கு நான் எங்க போவேன் என்று புலம்புகிறார்.
போலீஸுக்கு போகலாம் என ஸ்ருதி சொல்ல மீனா வேண்டாம் உங்களுக்கு தெரிஞ்ச பெரிய ஆளை வச்சு பேசி சமாதானம் செஞ்சிடுங்க எனக் கூறுகிறார். அப்போ அங்க வரும் கிரிஷ் ரோகிணி அழுவதை பார்த்து எதற்கு அழுறீங்க என அவரை சமாதானம் செய்கிறார்.