Siragadikka Aasai: ரோகிணியால் மீண்டும் சிக்கலில் விஜயா… ஏம்மா நீ சும்மாவே இருக்க மாட்டியா?

By :  Akhilan
Published On 2025-07-31 09:00 IST   |   Updated On 2025-07-31 09:00:00 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த அப்டேட்கள்.

ரோகிணி, ஸ்ருதி, மீனா மூவரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது அங்கு வரும் விஜயா கிரிஷ் குறித்து மோசமாக பேசுகிறார். இவன் ஒரு அனாதை குழந்தை எனக் கூற ரோகிணி நொந்து விடுகிறார். மீண்டும் கிரிஷ் குறித்து சொல்ல மீனா கடுப்பாகி பேசுகிறார்.

விஜயா கடுப்பாகி சென்று விட அங்கு ஸ்ருதி, ரோகிணியிடம் உங்களுக்கு தெரிஞ்சவங்களை வச்சு பேசி இதை சரி பண்ணுங்க எனக் கூறி செல்கிறார். உடனே ரோகிணி, சிட்டிக்கு கால் செய்து என் மாமியார் டான்ஸ் கிளாஸில் நடந்த விஷயத்தை கூறுகிறார்.

அவங்க இப்போ காசு கேட்டு மிரட்டுறாங்க. அவங்க எங்க அத்தை பக்கமே வரக்கூடாது என்கிறார். சிட்டி எவ்வளோ காசு கேட்டாங்க எனக் கேட்க நிறைய கேட்டு இருக்காங்க என்கிறார். அப்போ 10 லட்சம் மேல பணத்தை கேட்டு இருப்பாங்க எனச் சரியாக சொல்லிவிடுகிறார். 

 

பின்னர் அப்போ எனக்கு என்ன செய்வீங்க என்கிறார் சிட்டி. ரோகிணி நான் உனக்கு உதவி செஞ்சி இருக்கேன். என்கிட்ட இப்போ காசெல்லாம் இல்ல என்கிறார். அப்போ டிவி, ஏசி கொடுத்துடுங்க என்கிறார். ரோகிணி என்ன இப்படி கேட்கிற எனக் கூற அதெல்லாம் அப்படிதான் என்கிறார் சிட்டி.

ரோகிணியும் ஒரு கட்டத்தில் சரியென கூறிவிடுகிறார். அடுத்த நாள், ரோகிணி மனோஜிடம் நான் ஒருவரிடம் உதவி கேட்டு இருக்கேன். அவங்க ஏசி, டிவி மட்டும் கேட்டு இருப்பதாக சொல்கிறார். இதில் மனோஜ் கடுப்பாகி கத்த ஏற்கனவே பிசினஸ் லாஸ்ஸில் செல்வதாக சொல்கிறார்.

அப்போ அங்கு வேலைக்கு சேர்ந்த ராஜா எங்க ஊரில் இப்படி ஒரு கடையில் நடந்தப்போ அவங்க இன்ஸ்டால்மெண்ட் கட்டி பொருள் கொடுத்தாங்க எனக் கூற மனோஜும் அந்த ஐடியாவை ஏற்று கொள்கிறார். அதை செய்யலாம் எனவும் ரோகிணி முடிவெடுக்கிறார்.

சிட்டியின் ஆட்கள் அந்த வீட்டில் இருப்பவர்களை அடிக்க போக அந்த நேரத்தில் முத்து அங்கு வருகிறார். சிட்டி ஆட்கள் அவரை பார்த்து மறைந்து கொள்கின்றனர். முத்து வீட்டிற்குள் சென்று காசு கேட்டு இருக்கீங்க எனக் கேட்க எங்க மன உளைச்சலுக்கு வேண்டாமா என்கிறார்.

முத்து கோபமாக உங்க பையன் செஞ்சதுக்கு நாங்க ஏன் கொடுக்கணும். ஹோட்டலில் ரூம் எடுத்து செஞ்சி இருந்தா அங்க போய் கேட்டு இருப்பீங்களோ? எனக் கடுப்பாகிறார். உங்களை நம்பிதானே டான்ஸ் கிளாஸ் அனுப்பினோம். நீங்க கவனிக்காம விட்டது தப்பு என்கின்றனர்.

10 லட்சம் கொடுக்கலைனா என்ன செய்வீங்க எனக் கேட்க இப்போ சொல்லவா என ஒருவன் நக்கலாக பேச முத்து கடுப்பில் அடித்துவிட்டு செல்கிறார். அப்போ அங்கு வரும் சிட்டி ஆட்கள் இப்போ இவங்களை அடிச்சா அந்த பழி முத்து மேல விழும் என உள்ளே செல்கின்றனர்.

வீட்டில் முத்து இருக்க அங்கு திடீரென வரும் போலீஸார் முத்து தீபன் வீட்டினரை அடித்த காரணத்துக்காக அரெஸ்ட் செய்ய வேண்டும் எனக் கூற குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

Tags:    

Similar News