முத்துவை கண்டித்த மீனா… சீதா லவ் ஸ்டோரி ஆரம்பிச்சிடுச்சே… அடுத்த பிரச்னைக்கு ரெடியா?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்பு.
கான்ஸ்டபிள் அருண் தன்னை மூணு நாள் சஸ்பென்ஷன் செய்து விட்டதாக கூறுகிறார். சீதா நீங்க என்ன செஞ்சீங்க எனக் கேட்க அவரும் நடந்த விஷயங்களை கூறி முத்துவையும் திட்டுகிறார். சீதா அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.
அவர் கிளம்பியதும், சீதா குறித்து கான்ஸ்டபிள் நினைத்து கொள்கிறார். தொடர்ந்து வீட்டுக்கு வரும் முத்து, மீனாவிடம் கான்ஸ்டபிளை வீடியோ எடுத்து வெளியிட்டு அவருக்கு சஸ்பென்ஷன் வாங்கி கொடுத்தது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவர் தான் விட்டாருல நீங்க ஏன் இப்படி பண்ணுறீங்க என்கிறார். அடுத்த நாள் காலை மீனாவுக்கு கார் சொல்லி கொடுக்கிறார் முத்து. இருவரும் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது ஒரு கட்டத்தில் பொறுமை இல்லாமல் முத்து திட்டுகிறார்.
இப்படி திட்டுனா உங்களிடம் கத்துக்க யார் வருவாங்க. பொறுமையா சொல்லி கொடுத்தா தான் வருவாங்க என்கிறார். முத்து பின்னர் அமைதியா சொல்லிக்கொடுத்து கொண்டு இருக்கிறார். இருவரும் காரில் இருப்பதை ஸ்ருதி புகைப்படமாக எடுக்கிறார்.
பின்னர் விஜயாவின் டான்ஸ் கிளாஸில் எல்லாரும் வெயிட் செக் பண்ணிக்கொண்டு இருக்கின்றனர். அப்படியே சிந்தாமணி, விஜயா மற்றும் பார்வதி மூவரும் வெயிட் செக் பண்ணி தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டும் இருக்கின்றனர்.