மீண்டும் டாப் 5க்குள் நுழைந்த விஜய் சீரியல்… இந்த வார டிஆர்பியில் செம மாற்றமப்பா!
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. இதில் மேலும் பல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது.
ஒரு சீரியலின் வெற்றியை அதன் டிஆர்பிதான் நிர்ணயிக்கும். அந்த வகையில் சன் டிவியின் சீரியல்கள் தான் பொதுவாக ஆதிக்கம் செலுத்தி வரும். கடந்த சில வருடங்களாக தான் விஜய் டிவியின் சில சீரியல்கள் டாப் 10 க்குள் வந்து சாதனை புரிந்து வந்தது.
அந்த வகையில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் சில வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வந்தாலும் சமீப நாட்களாக டாப் 5க்குள் கூட நுழைய முடியாமல் தவித்து வந்தது. வில்லியான ரோகிணிக்கு கதை சாதகமாகவே நகர்ந்து வருவது இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இருந்தும் கடந்த சில வாரங்களாக ரோகிணிக்கு தொடர்ந்து இயக்குனர் ஆப்பு வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் டிஆர்பி தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறது. ஏழாம் இடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நான்காம் இடத்திற்கு வந்து இருக்கிறது.
கடந்த சில வாரங்களாக சிங்கப் பெண்ணே முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது அந்த இடத்தை இழந்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதலிடத்தினை மூன்று முடிச்சு சீரியல் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தினை கயல் சீரியல் இடம் பெற்றுள்ளது.
ஐந்தாவது சீரியல் மருமகள் சீரியலும், ஆறாம் இடத்தில் அன்னம் சீரியலும், ஏழாம் இடத்தில் எதிர்நீச்சல் 2 சீரியலும், எட்டாம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும், ஒன்பதாம் இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், பத்தாம் இடத்தில் ராமாயணம் சீரியலும் இடம்பெற்றுள்ளது.