ரோகிணிக்கு பள்ளியில் காத்திருக்கும் பெரிய ஆப்பு… மாட்டிக்க போறது இல்லப்பா!
Siragadikka Aasai: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
விஜயா தன்னுடைய டான்ஸ் ஸ்கூலில் வெயிட் செக் செய்ய அந்த மிஷினே பழுதாகி விடுகிறது. இதனால் பார்வதி மற்றும் சிந்தாமணி இருவரும் அவரை கலாய்க்கின்றனர். இதற்கு விஜயா கடுப்பாகிறார். தான் டயட் இருக்க போவதாக கூற அவரும் அதற்கெல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிடணும் என்கிறார்.
அந்த மீனாவா செஞ்சி தரப்போறா எனக் கூற ஏன் செய்யமாட்டா. கண்டிப்பா செய்வா. நான் இன்னும் 3 மாதத்தில் உடம்பை குறைத்து காட்டுகிறேன் என சவால் விடுகிறார். மனோஜின் கடைக்கு ஒரு பெண் வர அவரிடம் ஜொள்ளு விட்டு பேசுகிறார்.
அந்த பெண்ணும் தான் டயட்டீசியன் எனக் கூறி கார்ட் கொடுத்துவிட்டு வாங்கிய பொருளுக்கு விலையும் குறைத்துக்கொண்டு செல்கிறார். அவர் சென்றதும் மனோஜை ரோகிணி திட்டிக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்து, ரோகிணிக்கு அவர் அம்மா கால் செய்கிறார்.
என்ன விஷயம் என அவர் கேட்க பள்ளியில் பெற்றோர் மீட்டிங்காம். நீ வரணும் எனக் கூற ஏற்கனவே உன்ன அந்த முத்து பாத்துட்டான். நான் எப்படி வர முடியும்? வெளிநாட்டில் இருப்பதாக சொல்லிவிடு என்கிறார். உடனே ரோகிணி அம்மா கண்டிப்பா வரணும் என்கிறார்.
முத்து மற்றும் மீனா இருவரும் கார் ஓட்ட கத்துக்கொண்டு இருக்கின்றனர். இருவரும் பேசிக்கொண்டு வண்டியை ஓட்டும் போது மீனாவிடம் பூ கட்டும் பெண் வர அவர்களையும் ஏத்திக்கொண்டு செல்கிறார். ஒரு இடத்தில் மீனாவுடன் அவர்களையும் இறக்கி விடுகிறார்.
நாளை எபிசோட்டில், பள்ளியில் மீட்டிங்கிற்காக அண்ணாமலை செல்ல முத்துவும் கிரிஷை பார்க்க மீனாவை அழைக்கிறார். இதை கேட்கும் ரோகிணி என்ன செய்வது எனத் தெரியாமல் திணறி நிற்கிறார்.