பரசு கல்யாணத்துல பிரச்னை வெடிக்குமா? இப்படி வெயிட் பண்ணியே கடுப்பாக்குறாங்களே!

By :  Akhilan
Update:2025-02-19 09:27 IST

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்டில் நடக்க இருக்கும் விஷயங்கள் குறித்த தொகுப்புகள்.

அண்ணாமலை வீட்டுக்கு வரும் பரசு தன்னுடைய மனைவியுடன் பழத்தட்டு எடுத்து வந்து திருமணம் முடிவான விஷயம் குறித்து பேசுகிறார். மீனாவும், முத்துவும் இல்லையென்றால் இன்று திருமணம் இவ்வளவு தூரம் வந்திருக்காது எனக் கூறுகின்றனர். அவங்க வயசுல சின்னவங்களா இருந்தாலும் மனசுல ரொம்ப பெரியவங்க என்கிறார்.

இதை கேட்டு கடுப்பான விஜயா, புரோக்கர் வேலையும் பார்க்கிறாங்களா என கலாய்க்கிறார். கண்டிப்பா எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துடணும் என பரசு கூப்பிட எல்லாத்தையும் முன்ன நின்னு நடத்துவோம் என்கிறார் மீனா. டெக்கரேஷன் வேலையை தான் பார்த்துக் கொள்வதாக மீனா கூற, டிராவல்சை பார்த்துக் கொள்வதாக முத்து கூறுகிறார்.

மணப்பெண் அலங்காரத்தை தான் பார்த்துக் கொள்வதாக ரோகிணி கூறுகிறார். ரவி ஸ்வீட் தான் செய்து கொடுப்பதாக கூறுகிறார். மாப்பிள்ளை வீடு குறித்துப் பேச அவங்க வீட்ல எல்லாரும் ரொம்ப நல்லவங்க. மாப்பிள்ளையோட மாமா தங்கமான மனுஷன் என்கிறார்.

முத்து நீங்களும் அவரைப் பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கீங்க பாக்க தான் முடியல எனக் கூறுகிறார். கல்யாணத்தில் அவரை பார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார். மறுபக்கம் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் மனோஜ் தன்னுடைய கேஸ் குறித்து விசாரிக்கிறார்.

முதல்ல நீ யாரு அதை சொல்லு என போலீஸ்காரர் கேட்க 30 லட்சம் ஏமாந்த கேஸ் என்கிறார் மனோஜ். சீக்கிரம் கண்டுபிடித்துவிடுவார்கள் என போலீஸ்காரர் கூற பெரிய இடத்தில் கேஸ் கொடுத்தால் சீக்கிரம் நடக்குமா? என கேட்க ஆமா ஜனாதிபதிகிட்ட போய் கம்ப்ளைன்ட் கொடு என நக்கல் அடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து கான்ஸ்டபிள் அருணை அழைத்து இன்ஸ்பெக்டர் வீடியோ விவகாரம் குறித்து விசாரிக்கிறார். தனக்கொரு திடீர் வேலை இருந்ததாக கூறி சென்றதாக அருண்கூற உனக்கு மூணு நாள் சஸ்பென்ஷன் என்கிறார் இன்ஸ்பெக்டர். இதைத் தொடர்ந்து கான்ஸ்டபிள் இதை செய்தது யார் என எனக்கு தெரியும் எனக் கோபமாக பேசுகிறார்.

மீனா, வித்யா இருவரும் தங்களுள் அவரின் புது காதல் விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை ரோகிணி ஒளிந்து இருந்து கேட்க மீனாவோட ஏன் இப்படி பேசுற. உனக்கு நான் பிரண்டா அவ பிரெண்டா என கேட்கிறார். நீ எனக்கு பிரண்டு அவங்க எனக்கு அட்வைசர் என்கிறார் வித்யா.

என்ன விஷயம் என ரோகிணி கேட்க சீக்கிரம் உன்னிடம் சொல்வதாக வித்யா சமாளித்து விடுகிறார். சீதா கன்ஸ்டபிள் அருண் வீட்டுக்கு வருகிறார். அவர் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அருண் கோபமாக இருப்பது குறித்து அவரிடம் பேசி சமாதானம் செய்கிறார்.

Tags:    

Similar News