ரோகிணி மீது அண்ணாமலைக்கு ஏற்பட்ட சந்தேகம்.. சிக்குவாரா? பாத்துடலாமே!

By :  Akhilan
Update:2025-02-22 10:29 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.

கான்ஸ்டபிள் அருண் கீரை கடையில் வாங்கிக்கொண்டு இருக்கிறார். அப்போ அங்கு வரும் முத்து கீரை இருக்கா எனக் கேட்க இல்லப்பா சீக்கிரம் வரணும் என்கிறார். உடனே முத்து, அருணிடம் வம்புக்கு இழுக்கிறார். கீரை சாப்பிட்டா ஸ்ரென்த் வருமா என்கிறார்.

ஆமா சார். ஞாபக சக்தி வரும் எனக் கூற நமக்கு மறக்குற மாதிரி இருக்கணும் என முத்து கூற கடுப்புடன் கான்ஸ்டபிள் அருண் அவர் சட்டையை பிடிக்கிறார். அப்போ அவர் விழ போக அவரை முத்து பிடிக்கும் போது அவர் சட்டை கிழிந்து விடுகிறது. இதில் கடுப்பாகி அருண் சென்று விடுகிறார்.

மறுபக்கம் மீனா வீட்டில் இட்லி மற்றும் வடகறி செய்திருக்க மூன்று சாப்பிடும் அண்ணாமலை நான்காவது இட்லியை கேட்க மீனா ஆச்சரியமாக பார்க்கிறார். என்னவென்று முத்து கேட்க நான் எப்போது மூன்று சாப்பிடுவேன். நான்காவது கேட்கிறதால் மீனா பார்க்கிறா என்கிறார்.

விஜயா எதுக்கு 3 இட்லி தானே சாப்பிடுவீங்க. இப்போ எதுக்கு நாலாவது இட்லி எனக் கேட்கிறார். இவங்க என்னப்பா சாப்பிட்டா தானே கேட்பாங்க. ஏன் சாப்பிடுறீங்கனு கேட்கிறாங்க என்கிறார். உன் வயசுக்கு சாப்பிடுங்கனு சொல்லணும். என் வயசுக்கு அளவா தான் சாப்பிடணும் என்கிறார்.

விஜயா வடகறியை சாப்பிட மாட்டேன் எனக் கூறி பிளாக் காபி சாப்பிட கிச்சன் போக ஆசையில் இட்லியே சாப்பிட்டு விடுகிறார். அப்போ வரும் மனோஜ் எனக்கு தெரிஞ்ச ஒரு டயட்டீஷியன் இருக்காங்க. நான் கூப்பிட்டு போறேன் என்கிறார். அண்ணாமலை ஸ்கூலுக்கு போக ஏன் இன்னைக்கு எனக் கேட்கிறார் ரோகிணி.

இன்னைக்கு பெற்றோர் ஆசிரியர் மீட்டிங். அதான் வரச் சொல்லி இருக்காங்க என்கிறார். மீனாவும், முத்துவுடன் கிரிஷை பார்க்க செல்கிறார். அண்ணாமலையை இறக்கி விட்டு வெயிட் செய்கின்றனர். ரோகிணி அம்மா கிரிஷுடன் ஸ்கூலுக்கு வருகிறார்.

ரோகிணி விக், கூலிங் கிளாஸ், மாஸ்க் போட்டு வீடியோ காலில் மீட்டிங் அட்டர்ன் செய்ய வித்யா வாய்ஸ் கொடுக்கிறார். இதை பார்க்கும் அண்ணாமலை சந்தேகமாக பார்க்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Tags:    

Similar News