விஜய் டிவி முக்கிய தொடரில் இருந்து வெளியேறும் பிரபலம்? நல்ல ஹீரோயினும் போச்சா!
Vijay Tv: சின்னத்திரை நடிகர்கள் தங்களுடைய புகழை சில வருடங்கள் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும். அதனால் அவர்கள் கிடைக்கும் வாய்ப்பை எப்பொழுதும் பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நிகழ இருக்கிறது.
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலில் முக்கிய இடம் பிடித்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். மூன்று வருடங்களை கடந்து முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியுடன் கடந்த ஆண்டு முடிவு பெற்றது. இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் சீசன் தொடங்கி நடந்து வருகிறது.
முதல் சீசனில் இருந்தவர்களுடன் இரண்டாவது சீசனில் இன்னும் சில பிரபலங்கள் இணைந்து கொண்டனர். முதல் சீசனில் அண்ணன் மற்றும் மூன்று தம்பிகளின் கதையை சொன்ன கதைகளும் தற்போது அப்பா மற்றும் மூன்று மகன்களின் கதையை சொல்லி வருகிறது.
இதில் கடைசி மகனாக கதிர் கேரக்டரில் நடிக்கும் அசோக் பிரேம்குமார் மற்றும் ஷாலினி ஜோடி ரசிகர்களிடம் பிரபலமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஜீ தமிழில் கெட்டிமேளம் சீரியலில் முக்கிய கேரக்டரில் காட்டப்படும் புகைப்படத்தில் தற்போது ஷாலினியின் போட்டோ காட்டப்படுகிறது.
இரண்டு சீரியலும் போட்டி சீரியல்கள் என்பதால் ஷாலினி தொடர்ந்து விஜய் டிவியில் நீடிப்பது கஷ்டமாக பார்க்கப்படும். ஆனால் அந்த கேரக்டர் சின்ன கேரக்டராக இருந்தால் ஷாலினி பாண்டியன் ஸ்டோர்ஸில் தொடர்ந்து நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இருந்தும் ஷாலினியை கதாநாயகி ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகம் செய்தது விஜய் டிவி தான் என்பதால் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு விலகுவதும் நடக்காத விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் சில எபிசோட்களில் தெரியும் எனவும் கூறப்படுகிறது.