விஜயாவை தூண்டிவிடும் சிந்தாமணி… மீனாவிற்கு காத்திருக்கும் அடுத்த பிரச்னை… உருட்டும் சிறகடிக்க ஆசை டீம்…

By :  Akhilan
Update:2025-02-07 10:05 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்களின் தொகுப்புகள்.

மீனா மற்றும் முத்து இருவரும் பேசிவிட்டு ரவி மற்றும் ஸ்ருதியிடம் கிடைத்திருக்கும் பெரிய ஆர்டர் குறித்து சொல்லிவிட்டு காசில் கொஞ்சம் குறைகிறது. 50 ஆயிரம் இருந்தால் கொடுக்க முடியுமா என தயக்கமாக கேட்கின்றனர்.

ஸ்ருதி எப்ப வேண்டும் எனக் கேட்க நாளைக்கு கிடைத்தால் ஓகே எனக் கூற இப்பையே அனுப்புறேன் என்கிறார். உடனே அனுப்புகிறேன் என போனை எடுக்க எங்க அண்ணிக்கு நானும் கொடுப்பேன் என ரவியும் வருகிறார். சரி அப்போ பிரித்து பிரித்து போடலாம் என முடிவெடுக்கின்றனர்.

இதை பார்க்கும் மீனா மற்றும் மீனா சந்தோஷம் கொள்கின்றனர். உடனே முத்து தேங்க்ஸ் சொல்ல நான் படிக்கும் போது நீ எவ்வளவோ பண்ணி இருப்ப விடுடா என அவரை சமாதானம் செய்கிறார். சிந்தாமணி விஜயாவின் டான்ஸ் கிளாஸில் பரதநாட்டியம் கற்றுக்கொள்கிறார்.

அப்போ அவருக்கு போன் வர அதை பேசிவிட்டு அமைதியாக இருக்கிறார். விஜயா என்ன விஷயம் எனக் கேட்க மீனா விஜயாவை பற்றி தவறாக வெளியில் சொல்லிக்கொண்டு இருப்பதாக சொல்கிறார். ஆனால் நான் சொல்லினால் தொழில் போட்டியில் சொல்கிறேன் என நினைப்பதாக சொல்கிறார்.

இதனால் கடுப்பாகும் விஜயாவை மேலும் ஏற்றிவிடும் விதமாக அவளுக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கு அத செஞ்சிட்டா உங்களை மன்னிக்கவே மாட்டாள் என்கிறார். விஜயா கோபத்துடன் வீட்டுக்கு வந்து மீனாவை கண்டப்படி திட்டுகிறார்.

அண்ணாமலை என்ன ஆச்சு எனக் கேட்க என்னை மீனா தவறாக சொன்னதாக சொல்கிறார். யாரு அவங்க பேர் சொல்லு எனக் கேட்க விஜயா அமைதியாகிவிடுகிறார். ரோகிணியும் விஜயாவுக்கு சப்போர்ட் பேசுகிறார். உடனே மீனாவுக்கு ஸ்ருதி ஆதரவாக வருகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Tags:    

Similar News