சன் டிவி டிஆர்பி டாப் சீரியல்களின் புரோமோ அப்டேட்ஸ்... மிஸ் பண்ணாதீங்க

சன் டிவி சீரியல்களின் புரோமோ அப்டேட்ஸ்

By :  Akhilan
Update: 2024-12-25 08:50 GMT

சன் சீரியல்கள்

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி டாப் 5 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் புரோமோக்களின் தொகுப்புகள்.

கயல்

எழில் கோபமாக போக அவரை சமாதானம் செய்கிறார் கயல். கயலின் அம்மா சரவணன் வேலுவை அழைத்து நீங்க அடிக்கடி இங்கு வராதீங்க தம்பி. கயிலோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நீங்க நினைப்பீங்கனு நான் நம்புறேன் என்கிறார்.

விக்னேஷ், அன்புவும் ஷாலினியும் ஒருத்தருக்கு ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறார்கள் என வேதவல்லியிடம் கூறுகிறார். இதைக் கேட்கும் அவர் விக்னேஷ் நமக்கு சாதகமாக பேசுவான் என்று பார்த்தால் ஷாலினி பக்கம் போயிட்டானே என்கிறார்.

ஒருத்தவங்களுக்கு எங்க மேல கோபம் இருந்தா அதற்கு நியாயமான காரணம் இருக்கும். ஆனால் உனக்கு அப்படி என்ன காரணம் இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே என சுப்பிரமணியிடம் கயல் கூறிக் கொண்டிருக்கிறார்.

அன்னம்

சரவணன் வெளியில் வர அந்த அன்னத்தை போய் ஒரு கை பார்த்து விடுகிறேன் என அத்தை கிளம்ப கார்த்திக் தெரியாம பேசாத அம்மா. நம் அண்ணன் வெளியில் வந்ததற்கு அன்னம்தான் காரணம் என்கிறார். ரம்யா, கார்த்திக்கிடம் உங்க அண்ணனுக்கு அன்னம் மனைவியாக வரத்தான் இதெல்லாம் நடக்குதோ என கூறுகிறார்.

கார்த்தி அன்னத்தை சந்தித்து, ஒருத்தவங்களுக்கு லாபம் என்றால் இன்னொருத்தவங்களுக்கு நஷ்டம் அவ்வளவுதான் என்கிறார். இதற்கு அன்னம், நான் நல்லது செஞ்சா எனக்கு நல்லது தானே நடக்கிறான். ஆனா கெட்டது தானே நடக்குது சின்ன அத்தான் என்கிறார்.

மருமகள்

ஆதிரையிடம் பைனான்சியர், நான் உங்க அப்பா கிட்ட அப்படி கேட்டிருக்க மாட்டேன்மா. அந்த தேவா தான் கால் செய்து அப்படி பேச சொன்னதாக கூறுகிறார். பிரபு, சித்தப்பாவிடம் ஆதிரை அவங்க வீட்ல இருந்து பத்திரத்தை வாங்கிட்டு வந்து இருப்பாள்.

ஆனா உங்க பிரச்சனையை என்னைக்குமே தீர்க்க முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார். ஆதிரை வீட்டில் கார்த்தி உங்கள நான் அடிச்சது தப்புதான் மன்னிச்சிடுங்க என்கிறார். நீங்க யாரு என அடிக்க என கார்த்திக் சத்தம் போட குடும்பமே அதிர்ச்சியில் நிற்கிறது.

சிங்கப் பெண்ணே

அன்பு என்னால் நாளை கோயிலுக்கு வர முடியாது. துளசியை கல்யாணம் செய்துக்க சம்மதிக்க முடியாது என்கிறார். அம்மா, அப்போ நாளைக்கு என்னை நீ உயிரோட பார்க்க முடியாது என மிரட்டுகிறார். ஆனந்தி, நம்ம காதல் பெரிசு இல்ல அன்பு.

நாளைக்கு நடக்கிறது நடக்கட்டும். அதுக்கு பிறகு ஆண்டவன் விட்ட வழி என்கிறார். ஆனந்தி தன் தோழிகளிடம், அன்புக்கு யாரோ ஒரு பொண்ணு கூட கல்யாணம் சொல்றத கூட என்னால கேட்க முடியல எனக் கூறி அழுகிறார்.

மூன்று முடிச்சு

சுந்தரவள்ளிக்கு போன் செய்கிறார் மாதவி. சுந்தரவள்ளி, முக்கியமான விஷயமாக நான் வெளியே போயிட்டு இருக்கேன். போனை வை வீட்டுக்கு வந்த உடனே எல்லாம் பேசிக்கலாம் என்கிறார்.

சூர்யா நந்தினியிடம் கவலைப்படாதே என்க நான் ஏன் கவலைப்படணும். ஏன் சார் இப்படி பண்றீங்க என்று கேட்கிறார். அப்போ வரும் சுந்தரவள்ளி என்ன முக்கியமான விஷயம்? உடனே வர சொல்ற அளவுக்கு என்று திட்டுகிறார்.


Also Read: மலையாளத்தில் மாஸ் பண்ணும் திரிஷா… Identity டிரெய்லர் எப்படி இருக்கு?


Tags:    

Similar News