சூர்யாவின் பாசம்… ஆதிரையின் ஆட்டம்… எழிலின் கோபம்… கெஞ்சும் அன்னம்… ஆனந்தியின் நம்பிக்கை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களின் எபிசோட் புரோமோக்கள்

By :  Akhilan
Update: 2024-12-24 10:34 GMT

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி சூப்பர் ஹிட் தொடர்களான கயல், அன்னம், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் புரோமோ தொகுப்புகள்

மூன்று முடிச்சு

சூர்யாவிடம் நந்தினி நீங்க நேற்று தூங்குற வரைக்கும் பார்த்தேன் நீங்க குடிக்கவே இல்லையே என்கிறார். அதற்கு காரணம் நீதான் என்கிறார் சூர்யா. மாதவி சுரேகாவிடம் இந்த பத்திரிக்கையை அப்பாதான் அடிச்சிருப்பாரு தோணுவதாக சொல்கிறார்.

சுந்தரவள்ளியிடம் நந்தினி எதையோ கொடுக்கப் போக உனக்கு எத்தனை தடவை சொல்றது இந்த மூஞ்ச வச்சி என் முன்னாடி வராதன்னு திட்ட அந்த நேரத்தில் சூர்யா அங்கு வந்து விடுகிறார்.

மருமகள்

பிரபுவின் அத்தை அவரிடம், ஏன் அண்ணன் கிட்ட இருந்து ஆதிர எல்லா நகையும் வாங்கிட்டு போய் அடகு வைத்து விடுவா போலருக்கு என ஏற்றி விடுகிறார். பிரபு அலுவலகத்திற்கு கிளம்பும்போது அதிரை அவங்க வீட்டில் இருந்து பத்திரத்தை வாங்கிட்டு வந்தால் எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள் என சொல்லிவிட்டு செல்கிறார் பிரபு.

பாட்டி கூப்பிட நான் வேற எதையும் கேட்க விரும்பலை என கூறிவிடுகிறார். பைனான்சியர் அம்மாவிடம் உயிரை விட மானத்தை பெருசா நினைக்கிற எந்த ஒரு பொண்ணும் இதுதான் தருவாள் என அவரை அடித்து விடுகிறார்.

கயல்

வேதவல்லி வீட்டிற்கு கயல் மற்றும் அவருடைய அம்மா வருகின்றனர். போஸ்டிங் கிடைத்ததும் அன்பு மற்றும் ஷாலினிக்கு பேசி முடிக்கணும் என அவர் கூற வர வேதவள்ளி தடுத்து விடுகிறார்.

நானும் அனுவும் இப்போ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் என சரவணன் வேலு கயலிடம் கூறி சிரித்துக் கொள்கிறார். இதை பார்க்கும் எழில் சொல்ல சொல்ல கேட்காமல் இவன் இங்கே சுத்திக்கிட்டு இருக்கான். இவன் அடங்க மாட்டான் போல இருக்கு என கூறிக் கொள்கிறார்.

அன்னம்

கார்த்திக் தன் அண்ணனை சென்று ஜாமீனில் எடுத்து வரலாம் எனக் கூற அவன் தான் தப்பு செய்யவில்லை என நிரூபித்து விட்டு வரட்டும் என கூறிவிடுகிறார். குணா போலிஸ் இன்னும் நம்மளை சந்தேகப்படல. அதுக்குள்ள நாம பண்ண தொடங்கியிருந்து போய்விட வேண்டும் என்கிறார்.

கார்த்திக் காவல் நிலையம் வர, அங்கு அண்ணன் என்னோட மாமா பசங்க தங்கம் சார். அவங்க அடுத்தவங்க காசுக்கு ஆசைப்பட மாட்டாங்க என கைகூப்பி அழுது கொண்டிருக்கிறார்.


சிங்கப் பெண்ணே

அன்புவின் அம்மா ஆனந்தியை அலுவலகத்தில் வந்து பார்க்கிறார். நீ வராமல் இருந்திட கூடாதுன்னு தான் நேர்ல வந்து நானே உன்னை அழைத்ததாக சொல்கிறார். கண்டிப்பா நீ வரணும் என்கிறார். மகேஷ் அம்மா, தாம்பூலம் தானே மாத்த போறாங்க.

நிச்சயதார்த்தத்துக்கு உள்ள அன்பையும் ஆனந்தியையும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்கிறார். இன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லாம் கஷ்டத்தையும் பொருத்துகலாம் அன்பு. நம்ம காதல் ஜெயிக்கும் அன்பு. நம்புங்க என ஆனந்தி அவரிடம் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Also Read: கதைய வச்சு செஞ்சிருக்காங்க!.. இந்த மாதிரி ஆளுங்க பார்க்கலாம்.. 'மிஸ் யூ' படத்துக்கு ப்ளூ சட்டை விமர்சனம்..!

Tags:    

Similar News