வசமாக அடுத்த சிக்கலில் மனோஜ்… கிளம்பிய ராதிகா… மீண்டும் பிரச்னையில் தங்கமயில்

விஜய் டிவியில் சீரியல் எபிசோட் தொகுப்புகள்

By :  Akhilan
Update: 2024-12-25 06:05 GMT

சிறகடிக்க ஆசை - பாக்கியலட்சுமி 

Vijay Serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ்2 மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்2

தங்கமயிலின் அப்பா மற்றும் அம்மாவை வீட்டில் அமர வைத்து பேசிக்கொண்டிருக்கின்றனர். கோமதி மயிலுக்கு இன்னொரு நாள் தான் பிறந்த நாள் எனக் கூறியதாக கேட்க பள்ளியில் சேரும்போது தேதியை மாற்றிக் கொடுத்ததாகவும் ஆனால் அவளுக்கு இதுதான் உண்மையான பிறந்த நாள் என்றும் கூறுகின்றனர்.

ராஜி மற்றும் மீனா தங்களிடம் இருக்கும் பொருளை தங்க மயிலுக்கு பரிசாக கொடுக்கின்றனர். இதைத்தொடர்ந்து சரவணன் ஸ்கூலுக்கு கிளம்பலாம் என கூற்டிபிகேட் ஒருமுறை வீட்டில் இருக்கும்போது வேலைக்காக சென்ற இடத்தில் தொலைந்து விட்டதாக இன்னொரு பொய் அவிழ்த்து விடுகிறார்.

தங்கமயில் ஏற்கனவே நிறைய பொய்கள் சொல்லியாகிவிட்டது இன்னொரு பொய்யும் சொல்லி இருக்கிறோமே என வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். தங்கமயிலின் அப்பா மற்றும் அம்மா உன்னை இந்த குடும்பம் நல்லாதானே பார்த்துக்கிறாங்க அதற்காக ஒரு பொய் சொல்றது தப்பில்லை என அவரை சமாதானம் செய்துவிட்டு கிளம்பி செல்கின்றனர்.

சிறகடிக்க ஆசை

மனோஜ் பணத்தை தொலைத்த கதிர் குறித்து அவருடைய நண்பருடன் முத்து தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது ஜீவா கொடுத்த கண்ணாடியின் ஞாபகத்திற்கு வர மீனாவை பார்க்க செல்கிறார். மீனாவும் அவரும் போட்டோ எடுத்துக்கொள்ள அந்த போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்கும் சீதா ஜீவாவை பார்த்து விடுகிறார். இவர் தான் மனோஜின் லவ்வர் என்ற உண்மையை சொல்கிறார்.

இதில் கோபமாகும் நேராக அவரை போய் பார்க்கிறார். நான் தான் மனோஜின் தம்பி. எங்க அப்பாவோட உழைப்பை ஏமாத்திட்டு போனதற்காக அவரிடம் சண்டையிடுகிறார். இதைக் கேட்கும் ஜீவா சிரித்து உங்களையும் இத்தனை நாள் அவன் ஏமாற்றிக் கொண்டுதான் இருந்திருக்கான்.

நான் போன முறை வந்தபோதே அவனிடம் இருபத்தி லட்சம் மற்றும் 3 லட்சம் வட்டியும் சேர்த்து 30 லட்சம் கொடுத்து விட்டேன். இதற்கு நீங்கள் தானே சாட்சி கையெழுத்து போட்டீங்க என பேப்பரை காட்டுகிறார். எங்க வீட்ல நான் சொன்னா நம்ப மாட்டாங்க நீ வந்து சொல்லு என்ன அவரை அழைத்து செல்கிறார்.

வீட்டில் எல்லாரையும் அழைத்து ஹாலில் நிற்க வைத்து மனோஜை குற்றவாளி கூண்டில் நிற்க வைப்பது போல டைனிங் டேபிள் நடுவில் நிற்க வைக்கிறார். எல்லோரும் குழப்பத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். முக்கியமான ஒருவர் வந்திருப்பதாக கூறுகிறார் முத்து.

பாக்கியலட்சுமி

கோபி ஊருக்கு சென்ற விஷயத்தை ராதிகா அம்மா அவரிடம் வந்து சொல்ல உடனே வீட்டை காலி செய்வதாக முடிவு எடுக்கிறார். வீட்டின் பொருள்களை ஏற்ற பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸை வரக்கூறி கால் செய்கிறார். பாக்கியா செல்வி மற்றும் ஜெனியுடன் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

இந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு. அம்மா பையன் பாச போராட்டத்தை பார்க்க முடியாம கிச்சன் மற்றும் ரூம் என இருந்தாகி விட்டது என கூறுகிறார். அந்த நேரத்தில் ஒருவர் வந்து எதிர்த்த தெருவில் வீடு ஒன்று காலியாகி இருப்பதாகவும், அதன் வாடகை குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். ராதிகா வீடு என கூற எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்கியா ராதிகாவை பார்க்கில் சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே முதல் வாழ்க்கையை தொலைத்து விட்டேன். இரண்டாவது வாழ்க்கையும் எனக்கு சரியாக அமையும் என நினைக்கவில்லை என்கிறார். பாக்கியா என் கணவரை திருமணம் செய்து கொண்டவர்கள் என்ற நிலையில் நான் உங்களிடம் பேசவில்லை என்னுடைய பழைய தோழி என்ற நிலையில் தான் பேசுவதாக கூறுகிறார்.

ஆனால் என்னால் உங்களை பழைய பாக்கியாவாக பார்க்க முடியவில்லை. நீங்கள் மாறிவிட்டதாக கூறுகிறார். ஆமாம் நான் மாறிவிட்டேன். முன்னாடி இருந்தது போல இல்லாமல் தற்போது தைரியமாக மாறி இருக்கிறேன். இதற்கு நீங்கள் தான் காரணம் என்கிறார் பாக்கியா. ஈஸ்வரி, கோபி, இனியா திருநெல்வேலி இருக்கும் தங்கள் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். ஈஸ்வரி மூவருக்கும் சாப்பாடு ஊட்டி விட சிரித்த சந்தோஷமாக இருக்கின்றனர்.


Also Read: மலையாளத்தில் மாஸ் பண்ணும் திரிஷா… Identity டிரெய்லர் எப்படி இருக்கு?


Tags:    

Similar News