ஆப்பு வைக்க யாரும் வேணாம்… நீங்களே போதும்.. வெங்கட் பிரபுவால் கடுப்பான தளபதி!
Thalapathy68: தளபதி 68 படத்தின் வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு மீது கடுப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதை தொடர்ந்து படம் வெற்றி பெற வேண்டும் என்றால் கொஞ்ச நாள் உங்க பேச்சினை குறைத்து கொள்ளவும் அட்வைஸ் செய்து இருக்கிறாராம். லியோ படத்தினை முடித்துவிட்டு விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு டைம் ட்ராவல் படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்திற்காக படக்குழு […]
Thalapathy68: தளபதி 68 படத்தின் வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு மீது கடுப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதை தொடர்ந்து படம் வெற்றி பெற வேண்டும் என்றால் கொஞ்ச நாள் உங்க பேச்சினை குறைத்து கொள்ளவும் அட்வைஸ் செய்து இருக்கிறாராம்.
லியோ படத்தினை முடித்துவிட்டு விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு டைம் ட்ராவல் படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்திற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று விஎஃப்எக்ஸ் பணிக்காக டெஸ்ட் செய்திருந்தது. அதை தொடர்ந்து படக்குழு மட்டும் சென்னை திரும்பியது. விஜய் வரவில்லை.
இதையும் படிங்க: லியோ படம் ப்ளாப் ஆகணும்.. இல்ல விஜயிக்கு தான் கஷ்டம்… என்னங்க தலைகீழா சொல்றீங்க!
ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபுவோ அப்டேட் கொடுக்கிறேன் என்ற பெயரில் தொடர்ச்சியாக தன்னுடைய ட்விட்டரில் பதிவுகளை போட்டுக்கொண்டே இருந்தார். ஜோதிகா திடீரென படத்தில் இருந்து விலகிய நிலையில், சினேகாவுடன் படத்தினை வெளியிட்டு அவர் தன்னுடைய படத்தில் நடிப்பதை உறுதி செய்தார்.
ஒரு பேட்டியில் பிரசாந்த் நடிப்பதையும் அவரே போட்டு உடைத்தார். அவர் தந்தை கங்கை அமரன் இந்த கதையின் ஒன்லைனை கேட்டு விஜயே அசந்து விட்டார். அவர் தான் திரைக்கதை எழுத சொன்னது என ஆகாஓஹோ என புகழப்பட்டது. இதை தெரிந்த பின்னர் விஜயிற்கே கடுப்பாகி விட்டதாம்.
இதையும் படிங்க: 4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?
இன்னும் படத்தின் ஒரு பகுதி வேலை கூட ஆரம்பிக்காத நிலையில் இப்படி அப்டேட் கொடுக்க வேண்டுமா? இது படத்தினை பெருமளவில் பாதிக்கும். ரிலீஸில் மொக்க வாங்கணும் என விஜயே வெங்கட் பிரபுவை கூப்பிட்டு கண்டித்து இருக்கிறார்.
ஒரு படி மேலே போய் இனிவிட்டால் சரி வராது. படப்பிடிப்பினை தொடங்கினால் தான் வெங்கட்டின் வாய் ஓயும் என்ற ரீதியில் தான் சென்னை கிளம்பி வந்திருக்கிறார் விஜய். விரைவில் லியோ ஆடியோ ரிலீஸை முடித்துவிட்டு தளபதி68ஐ தொடங்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.