இப்பவும் அஜித் இத செய்யலைனா அவ்ளோதான்! - பகீர் தகவலை சொன்ன பிரபலம்..
தமிழ் சினிமாவில் அஜித் எப்பேற்பட்ட இடத்தில் இருக்கிறார் என அனைவருக்குமே தெரியும். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருக்கிறார் அஜித். ஆரம்பத்தில் பல விமர்சனங்கள், வெற்றி தோல்விகளை பார்த்து வந்த அஜித் இன்று ரஜினி, கமலுக்கு அடுத்தப்படியான ஒரு இடத்தில் இருக்கிறார். கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் ரஜினி, கமல், விஜய்க்கு அடுத்தப்படியான அஜித்தின் படங்கள் தான் […]
தமிழ் சினிமாவில் அஜித் எப்பேற்பட்ட இடத்தில் இருக்கிறார் என அனைவருக்குமே தெரியும். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருக்கிறார் அஜித். ஆரம்பத்தில் பல விமர்சனங்கள், வெற்றி தோல்விகளை பார்த்து வந்த அஜித் இன்று ரஜினி, கமலுக்கு அடுத்தப்படியான ஒரு இடத்தில் இருக்கிறார்.
கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் ரஜினி, கமல், விஜய்க்கு அடுத்தப்படியான அஜித்தின் படங்கள் தான் இருக்கின்றன. இத்தனை பெருமைகளை கொண்ட அஜித் தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என உதறித் தள்ளியவர்.
இதையும் படிங்க : லட்டுல வச்சனு நினைச்சியா.. நட்டுல வச்சேண்டா.. ஜேசன் சஞ்சய் விஷயத்தில் அஜித்தின் ஆடுபுலி ஆட்டம்… ஷாக்கான கோலிவுட்!
தனக்காக ரசிகர்கள் எந்தவொரு மெனக்கிடுதலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியவர். அதுமட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகள் , விழாக்கள் , தன் படத்தின் ஆடியோ விழாக்கள், வெற்றி விழாக்கள் என எதிலயும் கலந்து கொள்ள விரும்பாதவர்.
அப்படி இருக்கும் அஜித்துக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இது இப்படியே நீடித்துக் கொண்டே போனால் அஜித் இருக்கும் இடமே இல்லாமல் போய்விடும் என்பது மாதிரி வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க : ஆடியோ விழாவிற்கு தேதியை லாக் செய்த ‘லியோ- சூப்பர்ஸ்டார் சர்ச்சை பற்றி விஜயின் முடிவு இதுதானாம்!..
ஏனெனில் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாரூக்கான் இன்று அவருடைய படம் தமிழ் மக்களிடையேயும் வரவேற்பை பெற வேண்டுமென்பதற்காக அங்கு இருந்து சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார். அதோடு இல்லாமல் ஆயிரம் கணக்கில் கூடியிருந்த மக்கள் மத்தியில் மேடையில் வந்து நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த ஒரு பண்பு தமிழ் நடிகர்களிடம் யாருக்கும் கிடையாது என்றும் இனிமேலாவது இதை ஷாரூக்கானிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். விஜயாவது அவருடைய ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களை சந்திக்கிறார். ஆனால் அது கூட அஜித் செய்வதில்லை. இப்படியே போனால் அஜித்தை யார் என்று கேட்கும் அளவிற்கு அவர் நிலைமை போய்விடும் என்று அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க : ரஜினியும் இல்ல கமலும் இல்ல… லோகேஷ் அடுத்து இயக்க போறது இந்த நடிகரை தானாம்! ஓ அதான் தைரியமோ!