SK போட்ட ரூட் கிளியரா இருக்கே... சூரி காட்டுல இனி மழை தான்..!

காமெடியனாக இருந்து விடுதலை படத்தின் மூலமாக ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்து அபார வளர்ச்சியைப் பெற்று வருபவர் நடிகர் சூரி. இவரை தற்போது சந்தானத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். சந்தானம் இவ்வளவு காலம் ஹீரோவாக நடித்தும் பெயர் வாங்கவில்லை. சூரி 2 படங்களில் நடித்து பெயர் வாங்கி விட்டார். மார்க்கெட்டும் உயர்ந்து விட்டதே என்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம். நடிகர் சூரி இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன் […]

By :  sankaran v
Update: 2024-06-14 08:00 GMT

SK, Soori

காமெடியனாக இருந்து விடுதலை படத்தின் மூலமாக ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்து அபார வளர்ச்சியைப் பெற்று வருபவர் நடிகர் சூரி. இவரை தற்போது சந்தானத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். சந்தானம் இவ்வளவு காலம் ஹீரோவாக நடித்தும் பெயர் வாங்கவில்லை. சூரி 2 படங்களில் நடித்து பெயர் வாங்கி விட்டார். மார்க்கெட்டும் உயர்ந்து விட்டதே என்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

நடிகர் சூரி இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அது வரவேற்கக் கூடிய விஷயம் தான்.

இங்கிலீஷைத் தப்புத் தப்பா பேசி மொக்கைக் காமெடி பண்ணியவர் சூரி. அவருக்கு அதை எப்படி டெவலப் பண்ணனும்னு தெரியல. அந்த நேரத்துல அவருக்கு விடுதலை படம் வந்தது. டப்புன்னு ஹீரோவாயிட்டாரு. இப்ப மீம்ஸ்ல சூரி இனி காமெடி பக்கம் வரவேணாம்.

இதையும் படிங்க... அந்தப் படத்தால் ஃபீல் பண்ணி அழுத சூர்யா! எப்படி மீண்டு வந்தார் தெரியுமா? பிரபலம் சொன்ன தகவல்

சந்தானம் இனி காமெடி பக்கம் வாங்கன்னு வருது. அது உண்மை தான். சந்தானம் ஹீரோவா நடிக்கிறதை விட காமெடியா நடிக்கறது தான் பிடிக்குது. ஆனா சூரி காமெடியா நடிக்கிறதை விட ஹீரோவா நடிக்கிறது தான் பிடிக்குதுன்னு சொல்லாம சொல்றாங்க.

விடுதலை அவரை ஹீரோவாக்கியது. அடுத்து வந்த கருடனும் பிரகாசமான வெற்றியைத் தந்துள்ளது. சூரியை நம்பி அமீர் போன்ற பெரிய இயக்குனர்களே அவரை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அது அவருக்கு மிகப்பெரிய வளர்ச்சி.

ஒரு படம் நல்லாருக்குன்னா அதோட விமர்சனத்தை வைத்துத் தான் ரசிகன் தியேட்டருக்கு வருவான். இன்று சிவகார்த்திகேயன் சூரிக்கு ஒரு உறுதுணையாக இருப்பது போல ஆரம்பத்தில் சந்தானத்துக்கு சிம்பு உறுதுணையாக இருந்தார்.

Kottukkali

சந்தானத்தின் சில படங்கள் வெற்றி. பல படங்கள் பிளாப். காரணம் கன்டன்ட் தான். அவர் காமெடியை மொக்கையாக்கி விட்டு தன்னை அஜீத் ரேஞ்சுக்கு ஹீரோவாக நினைத்துக் கொள்கிறார். அதுதான் அவரது பலவீனம்.

சூரியை வைத்து c 'கொட்டுக்காளி' என்று ஒரு படத்தைத் தயாரிக்கிறார். அவருடைய ஓட்டல் பிசினஸிலும் சிவகார்த்திகேயன் முதலீடு பண்றதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. எந்தக் குதிரை ஜெயிக்கும் என்பதை ஓரளவு கணிப்பவர் தான் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க... ’விசில் போடு’ சொதப்பலுக்கு விஜய்தான் காரணமாம்!.. அடுத்த பாட்டுல வெயிட்டான விஷயத்தை இறக்கும் யுவன்!

சிவகார்த்திகேயன் வெறும் நடிகர் மட்டுமல்ல. அவருக்குள் நிறைய பிசினஸ் மைண்ட் இருக்கு. ஒரு யூ டியூப் சேனல்ல அவர் பண்ண முதலீடு ஒரு கோடி. ஆனா அவரோட பார்ட்னர்ஷிப்புக்குக் கிடைச்சது 50 கோடி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News