பாக்கியாவுக்கு போட்டியாக களமிறங்கும் கோபி… இதுலையாவது ஜெயிப்பீங்களா சாரே!..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் அவரை வேலை செய்ய விடாமல் கல்லாவில் உட்கார சொல்கிறார் செல்வி. நியூ உட்காருங்க எல்லா வேலையும் நாங்க பார்த்துக்கிறோம் என அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதன்பின் வீட்டு ஹாலில் கோபி உட்கார்ந்து இருக்க உள்ளே வரும் ராதிகாவிடம் பேச முயல்கிறார். ஆனால் ராதிகா பேசாமல் சென்று விடுகிறார். இதை பார்த்த இனியா ஈஸ்வரிடம் இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை என சொல்லி விடுகிறார். இதனால் ஈஸ்வரி ராதிகாவை அழைத்து எதுக்கு […]
Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் அவரை வேலை செய்ய விடாமல் கல்லாவில் உட்கார சொல்கிறார் செல்வி. நியூ உட்காருங்க எல்லா வேலையும் நாங்க பார்த்துக்கிறோம் என அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதன்பின் வீட்டு ஹாலில் கோபி உட்கார்ந்து இருக்க உள்ளே வரும் ராதிகாவிடம் பேச முயல்கிறார்.
ஆனால் ராதிகா பேசாமல் சென்று விடுகிறார். இதை பார்த்த இனியா ஈஸ்வரிடம் இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை என சொல்லி விடுகிறார். இதனால் ஈஸ்வரி ராதிகாவை அழைத்து எதுக்கு அவன் கிட்ட எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு இருக்க என கூறுகிறார்.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் படம் ரிலீஸ்!.. இளையராஜா செய்த மேஜிக்!.. வசூலை அள்ளிய விஜயகாந்த் படம்!..
அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நீங்க மாமா கிட்ட சண்டையே போட்டதில்லையா அத்தை. எப்ப பாத்தாலும் அவரை கேள்வி கேட்டுகிட்டு தானே இருக்கீங்க. நான் ஒன்னும் உங்க பிள்ளை கிட்ட சும்மா சண்டை போடல. அவர் எப்ப பார்த்தாலும் என்கிட்ட பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டே இருக்காரு என்ன சொல்லி விடுகிறார்.
அடுத்ததாக பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் காத்து வாங்கிக் கொண்டிருக்க சமைத்து வைத்தது எல்லாம் அப்படியே இருக்கிறது. புது ஹோட்டல் என்பதால் வியாபாரம் ஆகவில்லை போகப்போக சரியாகும் என மனதை திடப்படுத்திக் கொண்டு பாக்கியா வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்கு வந்து ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரிடம் பேசிவிட்டு கிச்சனுக்குள் செல்கிறார் பாக்யா. அமிர்தா இனியாவிற்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வரும் கோபி, தான் கிளவுட் கிச்சன் ஒன்றை தொடங்கப் போவதாக கூறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.
இதையும் படிங்க: முத்துவுக்கு ஆப்படித்த சிட்டி ஆட்கள்… மினிஸ்டரிடம் மாட்டுக்கொள்ள போவது யார்?