தனுஷின் குபேரா டீசர் எப்படி இருக்கு?.. நாகார்ஜுனாவை அடிக்குற சீன் செம!.. சரஸ்வதி சபதமா இருக்குமோ?

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 20ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது.;

By :  SARANYA
Update: 2025-05-25 13:52 GMT

சரஸ்வதி சபதம் படத்தில் கல்வியா? செல்வமா? வீரமா? என நாரதர் பாட்டுப் பாட ஊமையான சிவாஜி பாட்டுப் பாடும் புலவராக மாறிவிடுவார். கோழையான ஜெமினி கணேசன் வீரமான தளபதியாக மாறிவிடுவார். பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த கே.ஆர். விஜயா கழுத்தில் யானை மாலை போட அவர் ராணியாகி விடுவார்.

அதுபோல பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷை செல்வந்தனாக நாகார்ஜுனா மாற்ற அதன் பின்னர் என்ன என்ன பிரச்னை எல்லாம் நடக்கிறது என்கிற கதையில் தான் குபேரா படம் உருவாகி உள்ளது டீசரை பார்த்தாலே தெரிகிறது.


சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது.

இன்று வெளியான டீசரில் நாகார்ஜுனாவின் காட்சிகள் எல்லாம் மிரட்டலாக இருக்க, அதன் பின்னர் தனுஷை பிச்சைக்காரனாக காட்டும் இடங்களிலும், அவருக்கு கோட் மாட்டி விட்டு நாகார்ஜுனா பெரிய சிக்கலில் கோர்த்து விடப் பார்ப்பதும், ஒரு கட்டத்தில் நாகார்ஜுனாவையே தனுஷ் அடிக்க பாயும் காட்சிகள் என டீசர் முழுக்கவே எமோஷனல் காட்சிகள் பாடல்களின் வழியே கனெக்ட் செய்யப்பட்டு இருப்பது சூப்பர்.

இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஃபிளாப் ஆன நிலையில், குபேரா படம் தனுஷுக்கு பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி ஹர வீர மல்லு படம் வெளியாகும் நிலையில், இந்த படம் தள்ளிப் போகும் என கிசுகிசுக்கள் கிளம்பினாலும் படக்குழு ஜூன் 20 படத்தை வெளியிட உறுதியாக உள்ளனர்.


Full View


Tags:    

Similar News