குஷி விமர்சனம்: புருஷன் பொண்டாட்டியா விஜய்யும் சமந்தாவும் பர்ஃபெக்ட்டா இருக்காங்களே!..
கல்யாணம் பண்ணனும்னாலே காதலித்து தான் கல்யாணம் பண்ணனும் அப்போதான் சந்தோஷம் கொட்டும் என பொதுவாக காதல் திருமணங்களை பற்றி சொல்வார்கள். ஆனால், காதலித்து திருமணம் செய்துக் கொண்டாலும் 7.30 என்னை விட்டுப் போகாது என பாடும் அளவுக்குத் தான் திருமண வாழ்க்கை இருக்கும் என்பதை மீண்டுமொரு திரைப்படம் மூலம் சொல்லி உள்ளனர். இயக்குநர் சிவா நிர்வணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, லக்ஷ்மி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், சச்சிக் கடேகர், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள […]
கல்யாணம் பண்ணனும்னாலே காதலித்து தான் கல்யாணம் பண்ணனும் அப்போதான் சந்தோஷம் கொட்டும் என பொதுவாக காதல் திருமணங்களை பற்றி சொல்வார்கள். ஆனால், காதலித்து திருமணம் செய்துக் கொண்டாலும் 7.30 என்னை விட்டுப் போகாது என பாடும் அளவுக்குத் தான் திருமண வாழ்க்கை இருக்கும் என்பதை மீண்டுமொரு திரைப்படம் மூலம் சொல்லி உள்ளனர்.
இயக்குநர் சிவா நிர்வணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, லக்ஷ்மி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், சச்சிக் கடேகர், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ள குஷி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இதையும் படிங்க: அடேங்கப்பா!.. ஷங்கர் ஸ்கேனிங் செய்த இடத்தில் விஜய்!.. இந்தியன் 2 ரேஞ்சுக்கு சென்ற தளபதி 68!..
கடைசியாக விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படமும் சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படமும் ரசிகர்களை சாகடித்த நிலையில், இந்த படம் ரசிகர்களை டைட்டிலை போலவே குஷிப்படுத்தி உள்ளது.
மணிரத்தினத்தின் தீவிர ரசிகரான இயக்குநர் இந்த படத்தையே பல மணிரத்னம் படங்களின் மிக்சர் மசாலாவாகத்தான் எடுத்துள்ளார். இயக்குநர் அட்லீயை போல அழகாக இன்ஸ்பயர் செய்து திரைக்கதையையும் விஷுவலையும் வேறலெவலில் காட்டிய நிலையில், ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்!.. அப்பாவுடன் மகன் சஞ்சய் பேசமாட்டார்!.. பிரபலம் சொன்ன பகீர்!..
காஷ்மீரில் பேகம் எனும் பெயரில் சமந்தாவை சந்தித்த நொடியிலேயே வழக்கமான காதல் படங்களில் வருவது போல ஹீரோ காதல் கொள்ள அவர் ஒரு பிராமின் பெண் என தெரிய வர செம ட்விஸ்ட் உருவாகிறது. ஆனால், அதன் பின்னர் மெட்ரோ ரயிலில் இரு வீட்டாரும் பேசி திருமணத்தை நடத்த திட்டமிட, சமந்தாவின் தந்தை இவங்க ஜாதகமே சரியில்லை என திருமணத்துக்கு ஆப்பு வைத்து விடுவார்.
அதன் பின்னர் காதல் காரணமாக ரெஜிஸ்டர் திருமணம் செய்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தும் சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் கணவன் மனைவியாக மாறிய நிலையில், ஏற்படும் சண்டைகளும் பிரச்சனைகளையும் அனைவரது லைஃபிலும் கனெக்ட் ஆகும் சம்பவங்களுடன் கோர்த்து இயக்குநர் இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
நிறைகள் அதிகமாகவும் குறைகள் குறைவாகவும் உள்ள இந்த படத்தை தாராளமாக குடும்பத்துடன் பார்த்து கொண்டாடலாம். சமந்தாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் நினைத்தபடியே கம்பேக் ஹிட் கிடைத்த சந்தோஷத்தில் தான் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அப்படி இருவரும் ரொமான்ஸை கொட்டித் தீர்த்து இருக்கின்றனர் என தெரிகிறது.
குஷி - ஃபேமிலி என்டர்டெயினர்
ரேட்டிங்: 3.25/5