வெங்கட் பிரபுவுக்கு கறார் கண்டிஷன் போட்ட விஜய்!. தளபதி 68 பரபர அப்டேட்!..
நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் படம்தான் லியோ. இத்திரைப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மற்றும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.
இதைபோல் சின்னை 600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் கலகலப்பான கதைகளை படமாக எடுப்பதில் வல்லவர். இவர் மேலும் கோவா, சரோஜா போன்ற திரைப்படங்களை இயக்குயுள்ளார். இவர் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெலியான மங்காத்தா இவருக்கென தனி அங்கீகாரத்தை பெற்று தந்தது.
இதையும் படிங்க:இதே டிரெஸ்ஸோட பிக் பாஸுக்கு வாங்க!.. தர்ஷாவுக்குத்தான் எங்க ஒட்டுமொத்த ஓட்டும்.. சம்பவம் அந்த மாதிரி!..
தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகவிருக்கும் படம்தான் தளபதி68. இப்படத்தில் நடிகர் விஜய் இரு வேடங்களில் நடிக்கவிருக்கிறார். அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் மகன் விஜய்க்கு நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் தந்தை விஜய்க்கு ஜோடியாக ஆரம்பத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவிருப்பதாக இருந்தது.
இதையும் படிங்க:லோகி என்னய்யா பண்ணி வச்சிருக்க… லியோ படத்தை பார்த்து ஷாக்கான விஜய்… அடடே!
பின் இவர் இதிலிருந்து விலக இந்த கதாபாத்திரத்திற்கு நடிகைகள் சிம்ரன், சினேகா போன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது இந்த கதாபாத்திரத்திற்கு நடிகை சினேகா சம்மதம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு இன்னும் வெளிவிடவில்லை. இயக்குனர் வெங்கட்பிரபு அவ்வப்போது அளித்த பேட்டியின் மூலம் தனது படத்தினை பற்றிய அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார்.இதனை அறிந்த நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இப்போதைக்கு படத்தினை பற்றிய அறிவிப்பினை எங்கும் கூற வேண்டாம். லியோ பட ரிலீஸுக்கு பின் தளபதி 68 படத்தின் படபிடிப்புக்கு செல்லும் போது இதனை பற்றிய அறிவிப்புகளை வெளிவிடுங்கள் என கூறியுள்ளாராம்.
இதையும் படிங்க:விஜய் மகனுடன் இணைய போகும் பிரபலம் இவர்தானாம்… அதான் அந்த படத்துல இருந்து அப்பீட் ஆகிடீங்களா!…