அட! நம்ம கேப்டன் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தது வேறொரு பெயரா? நடந்த ட்விஸ்ட்…

சினிமா ஆசையால் மதுரையில் இருந்து புறப்பட்டு வந்து புறக்கணிப்புகள், அவமானங்களைக் கடந்து ஹீரோவாகி கேப்டனாக தமிழ் மக்கள் மனதில் நிலைத்துவிட்டவர் விஜயகாந்த்.

சிறுவயதில் படிப்பில் ஈடுபாடு இல்லாத விஜயகாந்த், கீரைத்துறையில் இருந்த தந்தையின் ரைஸ் மில்லை நிர்வகிக்கும் பொறுப்பை இளம் வயதிலேயே ஏற்றுக்கொண்டார். வியாபாரத்திலும் நாட்டம் இல்லாமல் இருந்த விஜயகாந்த் குறித்து அவரின் தந்தை அழகர்சாமி கவலைப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: வாலிக்கே வராத நேரத்தில் கருணாநிதி போட்ட வார்த்தைகள்… எம்ஜிஆருக்கு செம பொருத்தமா இருக்கே..!

ஆனால், விஜயகாந்தின் ஆர்வம் எல்லாம் எப்படியாவது சினிமாவில் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்பதில்தான் இருந்திருக்கிறது. இதற்குத் திருப்புமுனையாக அமைந்தது மதுரை ராசி ஸ்டூடியோவில் விதவிதமான போஸ்களில் அவர் எடுத்த புகைப்படங்கள்தான்.

பல நேர்காணல்களில் போட்டோகிராபர் ஆசைத்தம்பி பற்றியும் அவர் எடுத்த புகைப்படங்கள் குறித்தும் விஜயகாந்த் பேசியிருக்கிறார். விஜயராஜ் என்கிற இயற்பெயரோடு சென்னை வந்தவர், தனது பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். 1979-ல் வெளியான இனிக்கும் இளமை தொடங்கி முதல் 4 படங்களுமே தோல்விப்படங்கள்.

1980-ல் வெளியான தூரத்து இடிமுழக்கம் படம்தான் விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து அவரின் சினிமா பயணத்துக்கு வலுவான அடித்தளமிட்டது. விஜயகாந்தின் நிஜப்பெயர் நாராயணன். இது அவரது தாத்தாவின் பெயர். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் அவரை விஜயராஜ் என அழைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மொக்கை பண்ணிய கார்த்தி… அவரை வச்சி செய்த அமீர்… அதான் மாஸா இருந்துச்சோ!

Related Articles
Next Story
Share it