பொண்ணை ஏன் படிக்க வைக்கிற? ஓவராக பேசிய மக்களை கூப்பிட்டு மகளின் ஷோவை திருவிழாவாக மாற்றிய நிஷா தந்தை…
KPY Nisha: விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஆண்கள் தான் கலந்து கொண்டு வெல்லலாம் என்ற பிம்பத்தினை உடைத்தவர் அறந்தாங்கி நிஷா. அவரின் காமெடிக்கு இன்று பலர் ரசிகர்கள் என்றால் சென்னை வெள்ளத்தில் அவர் செய்த தொண்டுக்கு இன்று பலரும் அவருக்கு ரசிகர்களாகி விட்டனர்.
இப்படி புகழில் இருக்கும் நிஷா அவ்வளவு எளிதாக இந்த இடத்தினை பிடித்து விடவில்லை. ஒவ்வொரு இடத்தினை பிடிக்க அவர் பட்ட போராட்டம் ரொம்பவே அதிகம். சமீபத்தில் நிஷா தன் தந்தையை காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் தன் அப்பாவை காட்டிய நிஷா இவர் தான் என் ரோல் மாடல். இவரால் தான் நான் இருக்கேன் எனக் கூறி இருப்பார்.
இதையும் படிங்க: துப்பாக்கி கதை விஜய்க்கு பண்ணது இல்ல!.. அந்த ஹீரோ நடிக்கல!.. பகீர் கிளப்பும் முருகதாஸ்…
நிஷாவுக்கும் அவர் அப்பாவுக்குமான உறவு எப்படி இருந்தது தெரியுமா? அறந்தாங்கியை சேர்ந்தவர் நிஷா. வீட்டில் அப்பா, அம்மா, தம்பியுடன் வசித்து வந்தார். அப்பா வாரத்தில் இரண்டு நாள் கறிக்கடை போடுவாராம். நிஷாவை காலேஜ் வரை அனுப்பி படிக்க வைத்தாராம் அவர் அப்பா.
இருந்தும் ஒரு சமயத்தில் உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்து பெண் பிள்ளையை இதுவரை படிக்க வைத்ததே அதிகம். நிறுத்திவிடு எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் நிஷாவின் அப்பா அவர்கள் பேச்சை கேட்கவில்லையாம். தொடர்ந்து படி என அவருக்கு உத்வேகம் தருகிறார்.
அதே சமயத்தில் நிஷா பட்டிமன்றத்தில் சென்று பேச போக அதுக்கும் தடுக்க மீண்டும் வருகின்றனர் உறவினர்கள். ஆனால் இப்போதும் அவர் கண்டுக்காமல் கடந்து சென்றுவிடுகிறார். நிஷா இதுகுறித்து அவர் தந்தையிடம் கேட்க நான் படிக்கவில்லை. ஆனால் பாரதியை பற்றி கேட்டு இருக்கேன்.
இதையும் படிங்க: கோட் பட இசையமைப்பாளருக்கு கொக்கிப் போட்ட காடுவெட்டி ஹீரோ!.. இதுல யாரு சொல்றதுப்பா நிஜம்?..
பெண்கள் சுதந்திரமாக வளர வேண்டும். இருந்தும் ஒரு கண்டிஷன், இப்போ திருமணம் செஞ்சிக்கிட்ட நீ ஒரு பிள்ளையை பெற்று கொண்டு இனி பட்டிமன்றம் மற்ற விஷயங்களுக்கு வெளியில் போ எனவும் கூறுகிறார். அதுப்போல திருமணம் முடிந்து ஒரு மகன் பிறந்த பின்னரே நிஷா முதல்முறையாக கலக்க போவது யாரு ஆடிஷனுக்கு வருகிறார்.
அதில் செலக்ட் ஆகிவிடுகிறாராம். இதை தன் தந்தையிடம் கூற அவர் அருகில் இருந்த மண்டபத்தினை வாடகைக்கு எடுத்து அதில் ஊர்மக்களை அழைத்து பெரிய டிவியை வைத்து கலக்க போவது யாரு நிகழ்ச்சியை போட்டு காட்டினாராம். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு டிபன் போட்டு அதை திருவிழாவாக்கி கொண்டாடி விட்டாராம். தன் மகளை பற்றி பேசிய அனைவருக்கும் பேசாமல் தன் செயலில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: உலக அழகியுடன் முதல் திருமணம்… கோடிகளில் சொத்து… நிக்கோலயின் இரண்டாம் மனைவியாகும் வரலட்சுமி…