தளபதி 69 படத்தின் இயக்குநர் இவரா?.. கோட் பட தயாரிப்பாளர் யாரை சொல்லியிருக்காரு பாருங்க!..

Published on: April 15, 2024
---Advertisement---

நடிகர் விஜய்யின் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி அதிரடியாக 8 மில்லியன் வியூஸை கடந்து வைரலாகி வருகிறது. 24 மணி நேரத்துக்குள் 15 முதல் 20 மில்லியன் வியூஸை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைக்ஸ் எல்லாம் சும்மா பிச்சுக்கிட்டு போகுது.

யுவன் சங்கர் ராஜா இந்த அளவுக்கு மியூசிக் போட்டதே பெரிய விஷயம் என்றும் பாடல் சுமார் ரகமாக இருந்தாலும் நடிகர் விஜய், பிரபுதேவா மற்றூம் பிரசாந்தின் நடனம் பாடலை செம ஹிட் ஆக்கி விட்டது என தளபதி ரசிகர்கள் நமக்கு கிடைச்சது இதுதான் என ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்யின் கோட் படம் பற்றிய கேள்வி.. கடுப்பான மோகன்.. ஹரா டீசர் விழாவில் வாக்குவாதம்!..

லியோ படத்தின் “நான் ரெடி தான் வரவா” பாடல் வெளியாகும் போது கூட அந்த பாடல் “அரபிக் குத்து” அளவுக்கு இல்லை என்று தான் சொன்னார்கள். தொடர்ந்து ரஞ்சிதமே, நான் ரெடி தான் என பாடல்கள் ரிலீஸ் ஆகும் போது ஏற்படும் விமர்சனங்கள் தான் என்றாலும் கொஞ்ச நாளில் அந்த பாடல்கள் ஹிட் அடித்ததை போலவே விசில் போடு பாடலும் ஹிட் அடித்து விடும் என்று ப்யூர் விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

பிகில் படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி அடுத்து கோட் படத்தையும் தயாரித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் அவரிடம் கோட் படத்தின் அப்டேட்டை கேட்க ஏப்ரல் மாதம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி அறிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: நான் நினைச்சுக் கூட பாக்கல!.. வரலட்சுமி நிச்சயதார்த்தம் பற்றி இப்படி சொல்லிட்டாரே விஷால்!..

மங்காத்தா படத்தில் அஜித்துக்கு செம மாஸ் இன்ட்ரோவை வெங்கட் பிரபு வைத்திருப்பார். அதே போல கோட் படத்தின் இன்ட்ரோ வந்திருக்கா என்கிற கேள்விக்கு உஷாராக படம் வெளியாகும் செப்டம்பர் 5ம் தேதி முதல் ஷோவில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார்.

தளபதி 69 படத்தின் இயக்குநர் யார் என்கிற கேள்விக்கு எனக்குத் தெரியும் சொல்ல மாட்டேன் என்ற அவரிடம் யார் இயக்கினால் நல்லா இருக்கும் என கேட்டதற்கு மணிரத்னம் இயக்கினால் நல்லா இருக்கும். அந்த படத்தையும் நாங்களே தயாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்லீவ்லெஸ் உடையில் சிவகார்த்திகேயன் ஹீரோயின்!.. பார்த்தாலே சும்மா ஜில்லுன்னு இருக்கே!..

கமல்ஹாசனை எச். வினோத் இயக்கவிருந்த நிலையில், மணிரத்னம் உள்ளே புகுந்து தக் லைஃப் இயக்கியது போல தளபதி 69 படத்தையும் இயக்குவாரா என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.