கோபி நீங்க பெரிய வில்லன் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க… ஆனா இது பக்கா காமெடியால இருக்கு!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் ஃபீல் பண்ணுவதை பார்க்கும் பாக்கியா நானும் இந்த பிரச்னையை முடிக்க நிறைய ட்ரை செய்றேன். ஆனால் தொடங்கிய இடத்தில் போய் நிற்பதாக கூறுகிறார். செழியன் நீங்க கவலைப்படாதீங்க அம்மா. நானும் ஜெனியும் ஒன்னா இருப்போம் என்கிறார்.
வாங்கம்மா ரெஸ்டாரெண்ட் போய் இருக்கும் வேலைகளை பார்க்கலாம் என்கிறார். பாக்கியா ஆச்சரியப்பட அவருக்கு ஆறுதல் சொல்லி அழைத்து செல்கிறார் செழியன். வீட்டில் இருப்பவர்கள் கோர்ட்டில் என்ன நடந்து இருக்கும் என யோசித்து கொண்டு இருக்க அப்போ செழியன், பாக்கியா உள்ளே வருகின்றனர்.
கோர்ட்டில் மறுபடியும் கவுன்சிலிங் போட்டு இருப்பதாக கூறுகின்றனர். நாளை ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா குறித்து அமைச்சர் வருவது குறித்தும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதை கேட்கும் கோபி உங்களுக்கு பல்ப் கியாரண்டி தான் என உள்ளுக்குள் சிரித்து கொள்கிறார்.
இதையும் படிங்க: 31 குழந்தைங்களுக்கு நான் அம்மா!.. கல்யாணத்துக்கு பிறகும் நான் மாறல!.. ஹன்சிகா ஓப்பன் பேட்டி!..
கேண்டீனுக்கே நீங்க வரலை அத்தை. அமைச்சர் வரும் போது நீங்க வரணும் என்கிறார். பின்னர் எழில் நிறைய சேனலில் இருந்து வருவாங்க. நல்லா மகாலட்சுமி மாதிரி கிளம்பி வாங்க எனக் கூறுகிறார். இதையெல்லாம் பார்த்து கொண்டு இருக்கும் கோபி உடனே மினிஸ்டரின் பிஏவுக்கு கால் செய்கிறார். பள்ளி ஆண்டுவிழாவுக்கு வந்துருவாங்களா எனக் கேட்க கண்டிப்பா வருவாங்க என்கிறார்.
அப்போ எதோ ரெஸ்டாரெண்டுக்கு போறதா பேசிக்கிறாங்க எனக் கேட்க அதெல்லாம் இல்லை. சும்மா சொல்லுவாங்க. அதுக்குனு போயிடுவாங்களா என்கிறார். இதனால் கோபி செம குஷியாகி விடுகிறார். அடுத்த நாள் எல்லாரும் சாமி கும்பிட்டுவிட்டு ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவுக்கு செல்கின்றனர்.
இன்னைக்கு நீங்க மொக்கை வாங்க போறீங்க என கோபி சந்தோஷமாக தனக்கு தானே பேசிக்கொண்டு இருக்க அதை ராதிகா கேட்டு விடுகிறார். நம்ம நிலைமையே இங்க மோசமா இருக்கு. இதுல பாக்கியாவை பத்தி நினைச்சிட்டு இருக்கீங்க. நான் ஒரு லோன் போட்டு இருக்கேன். அந்த காசு சீக்கிரம் வந்துரும். அதை வச்சு பிசினஸ் செய்யுங்க எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: மீனாவுக்கு கிடைத்த பலே ஆஃபர்!… இனிமே முத்து ஆட்டம் வேற லெவலில் இருக்க போகுதுப்பா…