நாகேஷைப் பார்க்க சைக்கிளில் வந்த பிரபல இயக்குனர்... அட அவரா...?!

by sankaran v |   ( Updated:2024-06-30 16:23:36  )
Nagesh
X

Nagesh

வாலியும் அவரது நண்பரான நாகேஷூம் நண்பர்களாக இருந்தனர். ஒரு காலகட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதிக் கொண்டவர்கள் பின்னாளில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த போது நண்பர்களானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ்.

இதையும் படிங்க... கவுண்டமணியோடலாம் எப்படி நடிச்சாங்கன்னே தெரியல!… இப்படி சொல்லிட்டாரே விஜய் சேதுபதி!.

அப்போது நாகேஷ் ஒல்லியாக பார்க்கவே முடியாதவாறு கன்னம் எல்லாம் ஒட்டிப் போய் இருப்பாராம். அவர் சினிமா வாய்ப்பு தேடி வந்த போது 'நீ எல்லாம் எந்த நம்பிக்கையில் இங்கு சினிமாவுக்கு வந்த? உனக்கு ரயில்வே வேலை தான் லாயக்கு' என்றாராம் வாலி. அப்போது 'நீர் எந்த நம்பிக்கையில சினிமாவுக்கு வந்தீர்? நீர் என்ன பெரும் புலவரா?' என பதிலுக்கு வாலியைக் கிண்டலடித்துள்ளார் நாகேஷ்.

அதன்பிறகு இருவரும் சினிமாவிற்காக சென்னை உஸ்மான் ரோட்டில் இருந்த ஒரு கிளப் ஹவுஸில் தங்கி இருந்தார்களாம். அங்கு இருந்து கொண்டு ஒவ்வொரு இடமாக சென்று சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார்கள். வாலி எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டே இருப்பாராம்.

அதனால் நாகேஷ் அவரைப் பார்த்து 'ஏன் தூங்கிக்கொண்டே பொழுதை வீணாகக் கழிக்கிறாய்? நான் வேணும்னா பேப்பரும், பேனாவும் வாங்கித் தர்ரேன். கிடைக்குற நேரத்துல ஏதாவது கவிதை எழுது. அது உனக்குப் பிற்காலத்தில் பயன்படும்'னு சொல்லி பேப்பரும், பேனாவும் வாங்கிக் கொடுத்து அவரைக் கவிதை எழுத வைப்பாராம்.

இதையும் படிங்க... முகமா முக்கியம்!.. அந்த ஷேப்பை பார்த்தே தூக்கத்தை தொலைங்க!.. இளைஞர்களை ஏங்கவிடும் தர்ஷா குப்தா!..

அந்த அளவுக்கு வாலியின் மீது ஒரு அன்பு கொண்டுள்ளார் நாகேஷ். அதே நேரம் அவரும் பல படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கி விட்டார். பாலசந்தரின் சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் அவரே நாகேஷைப் பார்க்க வேண்டும் என்று சைக்கிளை அழுத்திக் கொண்டு அங்கு வருவாராம். கமலிடம் அடிக்கடி இந்தக் காட்சியில் நாகேஷ் இருந்தா எப்படி நடிச்சிருப்பான்னு அடிக்கடி சொல்வாராம் பாலசந்தர்.

Next Story