Cinema History
குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்த ஹீரோ!. கடுப்பாகி பானுமதி செய்த தரமான சம்பவம்!…
Banumathi: 50களில் தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக இருந்தவர் பானுமதி. பாடகி, நடிகை, கதாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். அதனால், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களே இவருடன் கவனமாக நடிப்பார்கள்.
பானுமதி எவ்வளவு திறமைசாலியோ அதே அளவுக்கு கோபக்காரரும் கூட. படப்பிடிப்பில் அவருக்கு ஏதேனும் பிடிக்கவில்லை எனில் உடனே கிளம்பி வீட்டுக்கு போய்விடுவார். அதன்பின் இயக்குனரும், தயாரிப்பாளரும் அவரின் வீடு தேடிச்சென்று சமாதானம் செய்து அழைத்து வருவார்கள்.
இதையும் படிங்க: பாசமலர் படத்தில் நடித்ததால் சாவித்ரிக்கு வந்த நஷ்டம்!… இந்த ரசிகர்களே இப்படித்தான்!…
இப்படி பலமுறை நடந்திருக்கிறது. நடிகையர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சாவித்ரி அறிமுகமான மிஸ்ஸியம்மா படத்தில் கூட முதலில் நடித்தவர் பானுமதிதான். ஆனால், படத்தின் காட்சிகளில் தயாரிப்பாளர் தலையிட்டதால் கோபமடைந்து அப்படத்திலிருந்து வெளியேறினார் பானுமதி. எனவே, அவருக்கு பதில் நடிக்க வந்தவர்தான் சாவித்ரி.
நாடோடி மன்னன் படம் 80 சதவீதம் முடியும் நிலையில் எம்.ஜி.ஆருடன் சண்டை போட்டுக்கொண்டு படத்தில் இருந்து வெளியேறினார் பானுமதி. எனவே, அவருக்கு பதில் சரோஜா தேவியை நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். பானுமதி அம்மாவுக்கு முன் நான் சின்ன பையன் என நடிகர் திலகம் சிவாஜியே சொன்னார் எனில் பானுமதியின் இமேஜ் எப்படி இருந்திருக்கும் என புரிந்து கொள்ளலாம்.
1940களில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் பியூ சின்னப்பா. இவருக்கு மதுபோதையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் பழக்கம் உண்டு. அதேபோல் சிகரெட்டும் பிடிப்பார். இயக்குனர் கிருஷ்னன் பஞ்சு இயக்கத்தில் சின்னப்பா நடித்த திரைப்படம் ரத்தினகுமார். இந்த படத்தின் கதாநாயகி பானுமதி. ஒருநாள் படப்பிடிப்பில் சின்னப்பாவுடன் நடிக்க பானுமதி அவரின் அருகில் சென்றபோது சின்னாப்பாவிடம் இருந்த வந்த மதுபோதை மற்றும் சிகரெட் வாசம் அவருக்கு கோபத்தை ஏற்படுத்த ‘எனக்கு தலைவலிக்கிறது’ என சொல்லிவிட்டு படப்பிடிப்பிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?
உடனே இயக்குனர் வீட்டிலிருந்த பானுமதியின் கணவரிடம் இதுபற்றி விசாரிக்க பி.யூ.சின்னப்பா குடித்துவிட்டு வந்ததால்தான் பானுமதி படப்பிடிப்பிலிருந்து வந்துவிட்டார் என அவர் சொல்லியிருக்கிறார். இதுபற்றி பியூ சின்னப்பாவிடம் சொல்லப்பட்டது. அடுத்தநாள் முதல் அந்த படத்தின் படப்பிடிப்பில் சின்னப்பா மது அருந்தாலும், புகை பிடிக்காமலும் கலந்துகொண்டாராம்.
மேலும், ‘நான் குடித்துவிட்டு வந்தது பானுமதிக்கு பிடிக்கவில்லை எனில் என்னிடமே அவர் சொல்லி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு ‘எனக்கு தலை வலிக்கிறது’ என ஏன் பொய் சொல்ல வேண்டும்’ என சலித்துக்கொண்டாராம் பியூ சின்னப்பா. ரத்தினகுமார் படம்தான் பியூ சின்னப்பாவிடம் இணைந்து பானுமதி நடித்த ஒரே திரைப்படம். இந்த படம் 1946ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனிமே நான் நடிக்க மாட்டேன்!.. சிவாஜி படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய பானுமதி…