பீஸ்ட் படம் சொதப்ப நெல்சன் காரணமே இல்லையாம்… விஜயை கவுக்க இப்படியா சதி பண்ணுவீங்க…

by Akhilan |
பீஸ்ட் படம் சொதப்ப நெல்சன் காரணமே இல்லையாம்… விஜயை கவுக்க இப்படியா சதி பண்ணுவீங்க…
X

Beast Movie: பீஸ்ட் படத்தின் ப்ளாப் திட்டமிட்ட சதி என்ற புதிய செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பல அதிர்ச்சி தகவல்களும் றெக்கை கட்டி பறக்கிறது. விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நெல்சனின் திரை வாழ்க்கையையே புரட்டி போடும் நிலையே உருவானது.

ஆனால் இந்த எல்லா பிரச்னைக்கும் பின்னால் சன் பிக்சர்ஸ் இருப்பது தான் தற்போதைய அதிர்ச்சி தகவலே. விஜய் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து கொண்டு விரைவில் அரசியல் எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. விஜயின் ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம், அரசியல் அதிருப்தி சில பக்கம் என பல மூத்த அரசியல்வாதிகளே விஜய் மீது சற்று நடுக்கத்தில் இருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: எங்களுக்கு முதல்ல பணம் கொடுங்க!. அப்புறம் உதவி பண்ணலாம்!.. விஜயை கலாய்க்கும் தயாரிப்பாளர்…

விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது காட்டப்பட்ட எதிர்ப்பு தற்போது விஜயிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கி இருக்கிறது. இதை அரசியல் பேச்சுகள் தொடங்கப்பட்ட பீஸ்ட் படத்திலே செய்து இருக்கிறார்களாம். இதுகுறித்து திரை விமர்சகர் செய்யாறு பாலு பேசும்போது, சமீபத்தில் நடந்த ஜவான் ஆடியோ ரிலீஸில் அண்ணா அண்ணா என அட்லீ விஜய் பற்றி பேசிய ஒளிபரப்பில் மொத்தமாக கட் செய்யப்பட்டது.

இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் நாங்க தயாரிப்பு நிறுவனம் இல்லை. ஒளிபரப்பு மட்டும் தான் செய்தோம் எனவும் கூறி மறுப்பு தெரிவித்தனர். இது எல்லாமே விஜயின் அரசியல் எண்ட்ரிக்கான எதிர்ப்பு தான். பீஸ்ட் படத்தின் போதே நெல்சன் இயக்கிய கதையை எடுக்கவிடவில்லை.

இதையும் படிங்க: 21 வருஷம் கழிச்சு விட்டத மீண்டும் கையிலெடுக்கும் டி.ஆர்! என்ன காரணம்னு தெரியுமா? இனிமே டப்பு டுப்பு டப்புதான்

இந்த விஷயங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு பீஸ்ட் படத்தினை வெளியிட அவசரம் காட்டியது நாங்கள் தான். அதனால் தான் நெல்சன் முடித்துக் கொடுத்தார் என சமீபத்தில் கலாநிதி மாறன் தெரிவித்தார். அதே நேரத்தில் அடுத்தடுத்த படங்களை விஜய் சன்பிக்சர்ஸுடன் செய்ய போவது இல்லை எனவும் கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.

Next Story