அந்த நடிகையால என் குடும்பத்துல பிரச்சனை வந்துடுச்சு... சுந்தர்.சி. உடைத்த ரகசியம்..!

by sankaran v |   ( Updated:2024-05-03 14:05:59  )
Sundar C
X

Sundar C

அரண்மனை 4 இன்று திரைக்கு வந்து சக்கை போடு போட்டு வருகிறது. படத்தை இயக்கிய சுந்தர்.சி. நடிகை மாளவிகா உடனான தனது திரையுலக அனுபவங்களை இவ்வாறு தெரிவித்துள்ளார். எனக்கு ரெண்டு பேரு ரொம்ப பிடிக்கும். கவுண்டமணி. அடுத்து மிர்ச்சி சிவா. மொக்கை சீனையும் எமோஷனலா பேசுவதுல சிவா சார் செமயா நடிப்பார். கலகலப்பு 3ல பார்க்கலாம்.

மாளவிகான்னு நான் தான் பேரு வச்சேன். எனக்கும் என் வைஃப்புக்கும் பெரிய சண்டையே வந்துடுச்சு. குழந்தை பிறந்தா என்ன பேரு வைக்கலாம்னு அவங்க ச்சூஸ் பண்ணது மாளவிகா. ஏங்க இந்த பேரு நல்லா இருக்கா இதைத் தான் நான் ச்சூஸ் பண்ணிருக்கேன்னு சொன்னாங்க.

இதையும் படிங்க... 75 ஆயிரம் சம்பளத்தை விட்டு போனேன்!. அட்லி 3500 கொடுத்தாரு!.. மேடையிலேயே புலம்பிய நடிகர்!..

அந்த டைம்ல நான் போன ஒர்க் கம்போசிங். அப்போ தேவா சார் மியூசிக். சார் ஹீரோயின் பேருல சாங் இருந்தா நல்லாருக்கும்னு சொல்றேன். அப்போ அவரு வெவ்வேறு பேரு பாடுறாரு. அப்புறம் சார் நல்ல பேரு இருந்தா சொல்லுங்க சார்னு எங்கிட்ட கேட்குறாரு. மாளவிகான்னு சொல்றேன். மாளவிகா... மாளவிகா... லாலா லா மாளவிகான்னு பாடல் சூப்பரா வந்துடுச்சு. சாங் மாளவிகான்னு போட்டதால ஹீரோயினுக்குப் பேரு மாளவிகான்னு வச்சிட்டோம்.

Malavika

Malavika

நடக்கக்கூட வராதுங்கறதை அவங்கக்கிட்டத் தான் கண்டுபிடிச்சேன். அழகான முகம். பிரில்லியண்டான ஸ்மைல் இருந்துச்சு. அந்தப் பாடல்ல டான்ஸே வராது. மாஸ்டரே சொல்லிக் கொடுத்து டயர்டா ஆயிட்டாரு. பின்னால பார்த்தா வாளமீனுக்கும் பாடல்ல எல்லாம் டான்ஸ்ல பட்டையைக் கிளப்பியிருப்பாரு... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உன்னைத்தேடி என்ற படத்தில் அஜீத், மாளவிகா நடிக்க சுந்தர்.சி. இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் தேவா. மாளவிகா பாடல் இந்தப் படத்தில் தான் வருகிறது. படத்தின்போது மாளவிகாவுக்கு தமிழ் தெரியாது. சைகையால் காட்டித் தான் நடிக்கவே வைத்தோம் என்கிறார் சுந்தர்.சி. பாடலில் கூட அஜீத் ஆடும்போது கையால் சைகைக் காட்டியே அவரை நிறுத்துவாராம்.

Next Story