Connect with us

Cinema History

அமிதாப் பச்சன் கிளம்புனாதான் ஷூட்டிங் ஆரம்பிக்கும்!.. அடம்பிடித்த பாக்கியராஜ்.. அப்படி என்ன நடந்துச்சு?

தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் பிரபலமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் ஆரம்ப காலத்தில் இருந்தே உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பாக்கியராஜ். தொடர்ந்து பல படங்களில் பாரதிராஜாவுடன் பணிபுரிந்த பிறகு பாக்கியராஜ் தனியாக படங்களை இயக்க துவங்கினார்.

பாக்கியராஜ் படங்கள் இயக்க துவங்கும் பொழுது பாரதிராஜாவில் இருந்து மொத்தமாக மாறுபட்டு புதிய பாணியில் தனது படங்களை இயக்க துவங்கினார். அதனால் அவரது படங்களுக்கு பெரும் அளவில் மக்கள் மத்தியில் வெற்றி கிடைத்தது. அதே சமயம் தமிழ் சினிமாவில் பலருக்கும் வாய்ப்புகளை கொடுத்து வாழ வைத்தவர் பாக்கியராஜ்.

bhagyaraj

bhagyaraj

இயக்குனர் பார்த்திபன், பாண்டியராஜ் போன்ற பலருக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களை வளர்த்து விட்டவர் பாக்கியராஜ். பாக்கியராஜ் நடித்த பல படங்கள் மிகவும் பிரபலமானவை. அவற்றில் முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளன.

தாவணி கனவுகள் திரைப்படத்தில் பாக்கியராஜை வைத்து பாரதிராஜா படம் இயக்குவது போன்ற காட்சிகள் வரும் அப்படியான காட்சிகள் படப்பிடிப்பாகும் பொழுது அதில் சுவாரஸ்யமான சில விஷயங்கள் நடந்தன.

நடிக்க மறுத்த பாக்கியராஜ்:

பாக்கியராஜ் நடிக்கும் ஒரு காட்சியை பார்த்துதான் பாரதிராஜா அவரை கதாநாயகன் ஆக்குவது போல காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்பொழுது அந்த படப்பிடிப்பு நடப்பதற்கு பக்கத்து ஷெட்டில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது பாக்கியராஜ் நடிப்பதை பார்த்து ஆர்வமாக தாவணி கனவுகள் திரைப்படத்தின் படப்பிடிப்பை பார்ப்பதற்காக அங்கு வந்து விட்டார் அமிதாபச்சன்.

ஆனால் பெரிய ஹீரோக்கள் நின்றால் பாக்கியராஜிற்கு நடிப்பதற்கு வராது. எனவே அவர் அமிதாபச்சன் போனால்தான் நான் நடிப்பேன், அவர் இருந்தால் எனக்கு நடிக்க வராது எனக் கூறியுள்ளார். அது புரியாமல் அமிதாப்பச்சன் பரவாயில்லை நானும் சும்மா ஆடியன்ஸ் கூட ஒக்காந்து இருக்கேன் நீங்கள் நடியுங்கள் எனக் கூறியுள்ளார்.

பிறகு பாக்கியராஜ் எனக்கு பெரிய நடிகர்களுக்கு மத்தியில் நடிக்க வராது எனக் கூறி அமிதாப்பச்சனை அனுப்பிவிட்டு அந்த படப்பிடிப்பில் நடித்துள்ளார். இதை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top