Connect with us
MGR

Cinema History

எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி கூப்பிட்ட ஒரே நடிகை இவங்கதானாம்… ரொம்ப தைரியம்தான்!..

தமிழக மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர், பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என பலவாறு போற்றப்பட்டவர். தனது புரட்சிகர வசனங்களாலும் அசரவைக்கும் ஸ்டைலினாலும் பல ரசிகர்களை கைக்குள் போட்டுக்கொண்டவர் எம்.ஜி.ஆர்.

நிரந்தர முதல்வர்

எம்.ஜி.ஆர் தொடக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் கலைஞருடன் இணைந்து பயணித்துக்கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் அவரது திரைப்படங்களில் எல்லாம் திமுகவை புகழும் வார்த்தைகள் குறியீடாக வந்துகொண்டு இருக்கும். குறிப்பாக பாடல் வரிகளில் அவ்வாறு பல வரிகள் இடம்பெற்றிருக்கும்.

இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர், கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து வெளிவந்து அதிமுகவை தொடங்கினார். அதன்பின் 1977 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற எம்.ஜி.ஆர், தனது கடைசி காலம் வரை முதல்வராகவே திகழ்ந்தார்.

MGR

MGR

சின்னவர்

எம்.ஜி.ஆர் முதல்வராவதற்கு முன்பு அவர் நடிகராக இருந்தபோதே அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. பலரும் அவரை சின்னவர் என்றும் அவரது அண்ணனை பெரியவர் என்றும்தான் அழைப்பார்கள். யாரும் அவரை பெயர் சொல்லி அழைக்கமாட்டார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் மற்றவரை தொலைப்பேசியில் அழைத்தால் “நான் ராமச்சந்திரன் பேசுறேன்” என்று கூறிவிட்டுத்தான் தொடர்வாராம்.

பெயர் சொல்லி கூப்பிடும் நடிகை

இந்த நிலையில் எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் எம்.ஜி.ஆரை எப்போதும் ராமச்சந்திரன் என்றே அழைப்பாராம். அவர்தான் நடிகை பானுமதி. ஆம்!

MGR and Bhanumathi

MGR and Bhanumathi

நடிகை பானுமதி எம்.ஜி.ஆரை எப்போதும் மிஸ்டர்.ராமச்சந்திரன் என்றுதான் அழைப்பாராம். எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் இடையே பல கருத்து மோதல்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top