Connect with us

Cinema History

இயக்குனர் காலில் விழுந்த விஜயகுமார்… அவர் இல்லன்னா இப்போ விஜயகுமார் இல்ல!..

ரஜினிகாந்த் சினிமாவில் வளர்ந்து வந்த சமகாலத்தில் அதே போல வளர்ந்து வந்தவர் நடிகர் விஜயக்குமார். வளர்த்தியான தேகத்தை கொண்டு ஹீரோ போன்ற தோற்றத்தில் இருந்ததால் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன.

ரஜினிக்கு வில்லனாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால் வில்லன் கதாபாத்திரம் அவருக்கு நன்றாக இருக்கவே தொடர்ந்து வில்லனாக நடிக்கவே வாய்ப்புகளை பெற்றார் விஜயக்குமார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு விஜயக்குமாருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துக்கொண்டே வந்தன. இந்த சமயத்தில்தான் பாரதிராஜா கிழக்கு சீமையிலே படத்திற்கான வேலையில் இறங்கியிருந்தார். கிழக்கு சீமையிலே திரைப்படம் கிட்டத்தட்ட பாசமலர் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.

கை நழுவிய வாய்ப்பு:

அதில் ராதிகாவின் கணவன் கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல ஆளாக தேர்ந்தெடுக்க வேண்டும் என யோசித்த பாரதிராஜா இதற்காக ராஜ்கிரணிடம் போய் பேசினார். ஆனால் அப்போது ராஜ்கிரண் கேட்ட சம்பளம் அதிகமாக இருந்ததால் அதற்கு பதிலாக விஜயகுமாரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் கதையை கேட்ட விஜயக்குமாரும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதை கேட்ட படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, வேகமாக விஜயகாந்திடம் சென்று “இந்த படம் உன் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். போய் பாரதிராஜா காலில் விழுந்து அந்த படத்தில் வாய்ப்பை வாங்கு” என கூறியுள்ளார்.

அன்று மாலையே பாரதிராஜாவை நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்து வாங்கி படத்தில் வாய்ப்பை பெற்றார் விஜயக்குமார். அதே போல அந்த படத்திற்கு பிறகு மீண்டும் விஜயக்குமாருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது.

இதையும் படிங்க: காஷ்மீர் குளிரில் விஜய் செய்த காரியம்… அரக்க பறக்க ஓடி வந்த படக்குழுவினர்… என்ன நடந்தது தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top