கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய்!.. கிண்டலாக பேசிய சூர்யா பட நடிகை!..

கள்ளக்குறிச்சிக்கு சென்று கள்ளச்சாராயம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபர்களை மருத்துவமனையில் நடிகர் விஜய் சந்தித்தது குறித்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்த நடிகை கடுமையாக விமர்சித்துள்ளார்.

”நாட்டுக்காக போராட பார்டருக்கு போனப்ப டெரரிஸ்ட்ட நேருக்கு நேர் தாக்கும் போது நெஞ்சில் குண்டு பட்டு ஹாஸ்பிடல்ல கவலைக்கிடமாக இருக்காங்க பாவம்” என செம நக்கலாக பிக் பாஸ் பிரபலமும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் சோசியல் மீடியாவில் விஜய்க்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘கல்கி’யில் டம்மி பீஸா மாறிய கமல்! உலக நாயகனுக்கே இந்த நிலைமையா? இத செய்ய மறந்துட்டாங்களே

உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிகள் அறிவித்தும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் வந்தபோது வாய் திறக்காத அனிதா சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்று ஆறுதல் தெரிவித்ததும் இப்படி ஒரு கமெண்ட்டை போட்டிருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சன் டிவியில் செய்தியாளராக பணியாற்றிய விசுவாசம் கொஞ்சம் கூட இருக்கத்தானே செய்யும் என்றும் திமுக ஆதரவாளராக அனிதா சம்பத் உள்ளநிலையில் இப்படி விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் என தளபதி ரசிகர்கள் அனிதா சம்பத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!.. காசு எல்லாம் போச்சி!.. புலம்பும் நடிகர்!..

கே. வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா மற்றும் சாயிஷா நடித்த காப்பான் படத்தில் செய்தியாளராகவே சினிமாவில் நடித்திருப்பார் அனிதா சம்பத். அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்திலும் செல்வராகவனுக்கு ஜோடியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்து சென்றார்.

கள்ளச்சாராயம் குடித்து பாதித்த மக்களை சந்திக்கும்போது அவர்களைப் போட்டு அடித்து பஞ்ச் டயலாக் பேசினால் சரியாக இருக்குமா? என்றும் அனிதா சம்பத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் பெரிதான நிலையில், தான் விஜய்க்கு எதிராக எந்த கருத்தையும் சொல்லவில்லை என்றும் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் படுத்து இருப்பவர்களை மீடியாக்கள் தியாகி ஆக்குகின்றன. அதைத்தான் கண்டித்தேன் என அந்தர் பல்டி அடித்துள்ளார்.

இதையும் படிங்க: படத்துலதான் அப்படின்னா!.. நிஜத்துலயுமா?. காதலியை பிடித்து தள்ளி விட பார்த்த வில்லன் நடிகர்!..

 

Related Articles

Next Story