கமலையே கலாய்த்த மாயா.. இது அடுத்த சித்து வேலையா? இதெல்லாம் தேவையா ஆண்டவரே…
Bigg boss7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல பொழுதுபொக்கு நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தற்போது ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முந்தைய சீசனை போல் இது இல்லை என நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் கழுவி ஊத்தி வருகின்றனர்.
மாயா, பூர்ணிமா, ஜோவிகா போன்ற போட்டியாளர்கள் அடிக்கும் லூட்டி சொல்ல முடியாத அளவு உள்ளது. அம்மாவுக்கு பொண்ணு சளைச்சவ இல்லை எனும் சொல்லும் அளவிற்கு ஜோவிகா அடாவடி செய்து வருகிறார். மேலும் இதில் மிகவும் அலும்பு பண்ணுவது மாயாதான்.
இதையும் வாசிங்க:கொஞ்சம் பீப் போடுங்க பிக் பாஸ்!.. கெட்ட வார்த்தையில் பேசிய மாயா.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!..
பிரதீப் மேலிருந்த பொறாமை தாங்க முடியாத மாயா சரியான ஒரு திட்டத்தினை தீட்டி அவரை வெளியே அனுப்பிவிட்டதாய் வலைதளவாசிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் என்னதான் மாயா இவ்வளவு திட்டம் தீட்டினாலும் வெளிவந்த பிரதிப்பிற்கு சமூக வலைதளத்தில் கடும் ஆதரவும் கிடைத்துதான் வருகிறது.
மேலும் பிரதீப் வைல்ட்கார்டு எண்ட்ரியாக திரும்ப வரலாம் என்றும் தகவல்கள் உலாவுகின்றன. இந்நிலையில் தொடர்ந்து தனது சித்து வேலையை காட்டி வரும் மாயா தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசனையே உதாசினப்படுத்தியுள்ளார்.
இதையும் வாசிங்க:நிக்ஷனுக்கு செக் வச்ச பிக்பாஸ்! போர்க்கொடி தூக்கும் சின்ன பிக்பாஸ் டீம்- மாட்னாரு தடவல் மன்னன்
கமல்சார் மிஞ்சி போனால் என்ன கேட்பார். நீங்க ஏன் பிரஷை ஒளித்து வச்சீங்க?.. என கேட்டால் சாரி சார்.. தெரியாம பண்ணிட்டேன்… நீங்க ஏன் எல்லாரும் இருக்கும்போது ரூல்ஸை படிக்கல… என கேட்டால் சாரி சார் என்னை கேப்டன் என சொன்னாங்க.. நான் அந்த பயத்துல இருந்தேன்… என சொல்லி சமாளிக்கலாம் என ஜோவிகா மற்றும் ஐஷூவிடம் கூறுகிறார்.
இந்த கிளிப் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளரான கமலையே மாயா தற்போது இப்படி பேசுவது அவருக்கு நல்லதல்ல என கருத்துகள் உலாவுகின்றன. இதற்கு வார இறுதியில் கமல் இதற்கு என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் வாசிங்க:போடு இதுதான் ஒரிஜினல் தீபாவளியே! பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி