வடிவேல் செஞ்ச வேலையில் ஒரு மாசம் என் மூக்குல ரத்தம்!.. காமெடிக்காக கஷ்டப்பட்ட போண்டா மணி..

இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து சினிமா நடிகர் ஆனவர் போண்டா மணி. சினிமாவில் நடிப்பதில் அவருக்கு இருந்த ஆசை, ஆர்வம் எல்லாம் சேர்ந்துதான் அவரை இயக்கியது. பல வருடங்களுக்கு முன்பே சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால், வடிவேலுவுடன் இணைந்து நடித்த பின்னரே ரசிகர்களிடம் போண்டா மணி பிரபலமானார்.

bonda

bonda

அடிச்சி கூட கேட்பாங்க.. சொல்லிராதீங்க!.. என்ன மூஞ்சுல தக்காளி சட்னி?.. உள்ளிட்ட பல காட்சிகளிலும் வடிவேலுவுடன் நடித்து பிரபலமானவர் இவர். ஏழுமலை படத்தில் வடிவேல் மாமூல் கேட்க செல்லும்போது பிச்சையெடுக்கும் வேடத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

இதையும் படிங்க: போண்டா மணி சாவுக்கு கூட போகாத வடிவேலு… நடந்தது இதுதான்!.. ஷாக்கா இருக்கே!..

சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இரு சீரகங்களும் பழுதடைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. எனவே, தனக்கு திரையுலகினர் உதவ வேண்டும் என கோரிக்கையும் வைத்தார். தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டும் அவருக்கு உதவினர்.

ஆனால், போண்டா மணியை தனது பல திரைப்படங்களிலும் பயன்படுத்திய நடிகர் வடிவேலு அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘கண்டிப்பாக செய்வேன்’ என சொன்னார். ஆனால், ஒரு ரூபாய் கூட அவர் கொடுக்கவில்லை. இந்நிலையில்தான் சமீபத்தில் வீட்டிலேயே மயக்கமடைந்து போண்டா மணி மரணமடைந்தார்.

இதையும் படிங்க: என் பக்கமே நீ வராத!. போண்டா மணியை எச்சரித்த விவேக்… எதுக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…

அவரின் இறப்புக்கும் வடிவேலு போகவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு போண்டா மணி கொடுத்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. சுந்தரம் டிராவல்ஸ் திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு காட்சியில் வடிவேலுவும், முரளியும் வைத்திருக்கும் பஸ்ஸிலிருந்து கருப்பு புகை என் மேல் பட்டு நான் கருப்பாக மாறுவது போல காட்சி.

vadivelu

வண்டியிலிருந்து வரும் புகையால் அவ்வளவு கருப்பாக மாற முடியாது என்பதால் டை உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி வைத்து மண்ணில் புதைத்து வைத்து அதை வெடிக்க வைத்து என் படும்படி வடிவேல் செய்துவிட்டார். ஆனால், என்னிடம் அந்த காட்சி பற்றி சொல்லவே இல்லை. அது என் முகத்தில் பட்டு மூக்கெல்லாம் ஏறி ஒரு மாதம் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அந்த காமெடி மக்களிடம் பிரபலமாகவில்லை. எனக்கு எந்த பேரும் கிடைக்கவில்லை’ என போண்டா மணி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: தாலி கட்டும் நேரத்தில் விரைந்த போலீஸார்! அந்த நடிகர் கொடுத்த புகார் – அதிரிபுதிரியாக நடந்த போண்டாமணி திருமணம்

Related Articles
Next Story
Share it