More
Categories: Cinema News latest news

சின்மயி சொன்ன பொய்யால் பல லட்சங்கள் நஷ்டம்… லியோவில் லோகேஷ் செஞ்சது தப்பு.. சீறி பாயும் பிரபலம்

Chinmayi: நடிகை சின்மயிக்கு கோலிவுட்டில் எல்லா நேரத்திலும் ஒரு சர்ச்சை உருவாகி கொண்டே இருக்கும். அப்படி மீண்டும் அவர் பெயர் அடிப்பட்டு இருக்கும் நிலையில், அதுகுறித்து மேலும் சில முக்கிய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

நடிகை சின்மயி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானவர். நிறைய சினிமா பாடல்களுடன் அவர் நாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்தார். தடாலடியாக கவிஞர் வைரமுத்துவின் மீது என்னிடம் தவறாக நடந்து கொண்டார் எனக் குற்றச்சாட்டை வைத்தார். இது பெரிய அளவில் சர்ச்சையானது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஜெயலலிதாவா?.. சரோஜாதேவியா?!.. ஏ.எம்.வீரப்பன் செய்த வேலையில் கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்…

அதை தொடர்ந்து அவரை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினர். இதுகுறித்து விசாரிக்கும் போது ஆயுட்கால உறுப்பினர்கள் இல்லாதோர் மாதம் கடைசி நாளில் உறுப்பினர் கட்டணத்தினை செலுத்த வேண்டும். ஆனால் சின்மயி 2 வருடமாக டப்பிங் யூனியனுக்கு கட்டணம் எதுவும் செலுத்தவில்லை.

இதனால் அவர் நீக்கப்பட்டு இருப்பதாக அப்போது இருந்த தலைவரும், நடிகருமான ராதாரவி தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து தடையில் இருக்கும் போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய லியோ படத்தில் த்ரிஷாவுக்கு சின்மயி தான் குரல் கொடுக்க வேண்டும். அவர் மீது இருக்கும் தடை குறித்தெல்லாம் எனக்கு கவலை இல்லை எனவும் பேசி இருப்பார்.

இதையும் படிங்க: நாளைக்கு உன்ன கல்யாணம் பன்றேன்!.. சரோஜாதேவியை அதிரவைத்த சின்னப்பா தேவர்…

இந்நிலையில், சின்மயி தனது உறுப்பினர் நீக்கம் தொடர்பாக நீதிமன்றம் படியேற அங்கோ யூனியன் முடிவே சரி எனத் தீர்ப்பு வந்து இருக்கிறது. இதை தொடர்ந்து தற்போது டப்பிங் யூனியனில் அடுத்த தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் ராதாரவிக்கு எதிராக நடிகர் ராஜேந்திரன் களம் காண இருக்கிறார். அப்போது அவர் கொடுத்த பேட்டியில், சின்மயிக்காக யூனியன் கோர்ட் சென்று வெற்றி பெற்றாலும், அவர் மீது தப்பு இல்லை என அவர் சொன்ன பொய்யால் பல லட்சங்கள் நஷ்டம்.

அதெல்லாம் யார் காசு? சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் கொடுத்ததை தேவையே இல்லாமல் விட்டு விட்டோம். லோகேஷ் கனகராஜ் தடை குறித்து கவலை இல்லை எனச் சொல்லியது குறித்து கேள்விப்பட்டேன். அது ரொம்பவே தப்பான விஷயம். தேர்தல் முடிந்த பின்னர் இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வு எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயின் கடைசி படத்தில் அவருக்கு இத்தனை கோடி சம்பளமா? முதலிடத்தை தூக்கி போட கெத்து வேணும்…

Published by
Akhilan

Recent Posts